தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பாக்ஸ் மேட்டர்!

பாக்ஸ் மேட்டர்!

பாக்ஸ் மேட்டர்!


PUBLISHED ON : ஆக 13, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 13, 2010


Follow on Google
அ நிறம் | அளவு

பொதுவாக ஆண்களின் குரலை விடப் பெண்களின் குரல் இனிமையானது. ஆண்களின் குரல் 11-12 வயது வரை பெண்களின் குரல் போன்றுள்ளது. இவ்வயதிற்குப் பிறகு குரல் கரகரப்பா மாறுகிறது. இருப்பினும், பெண் குழந்தைகளில் இவ்வயதிற்குப்பிறகு, குரலில் எவ்வித மாற்றமும் ஏற்படுவதில்லை. 12, 13 வயதைப் பால் பருவமடையும் காலம் என்பர். இவ்வயதில் உடலிலுள்ள நாளமில்லாச் சுரப்பிகள் சில பால் வேற்றுமையை உண்டாக்கும். ஹார்மோன்களைச் சுரந்து கொட்ட ஆரம்பிக்கின்றன.

இந்த ஹார்மோன்கள், ஆண், பெண் உடலின் பாலினத்திற்கு ஏற்ப அனேக வேற்றுமை குணாதிசயங்களைத் தோற்றுவிக்கின்றன. ஆண்களில் இந்த ஹார்மோன்கள் கை, முகம் போன்ற பகுதிகளில் உரோமங்கள் தோன்றவும், வளரவும் முக்கியமானவை. இதனால் ஆண்களின் குரலில் கரகரப்புத் தோன்றுகிறது. இந்நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் ஹார்மோன்களுள் ஒன்று டெஸ்டோஸ்டிரான் எனப்படும்.

இது ஒலி எழுப்பும், நாணின் நீளத்தையும், பருமனையும் அதிகப்படுத்துகிறது. மேலும், ஒலிப்பையையும் மாற்றுகிறது. இதனால் ஒலி நாணின் அதிர்வு நிலை மாறுபட்டு குரலின் உச்சநிலை வேறுபடுகிறது. இவ்வகையான ஹார்மோன்கள் பெண்களிடம் காணப்படாது போனாலும் மிகக் குறைந்த மாற்றமே ஏற்படுகிறது. தொண்டை, வாய், மூக்கு, மேல் தாடைகள் ஆகியவை வளர்ச்சி பெற்று வேறுபடுவதாலும் குரலில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் பெண்களின் குரல் இனிமையாகவுள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us