தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பாக்ஸ்மேட்டர்

பாக்ஸ்மேட்டர்

பாக்ஸ்மேட்டர்


PUBLISHED ON : ஆக 20, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 20, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

(1). சூப்பர் பல்லி

பல்லி தனது வாலை எங்காவது மாட்டி அறுத்துக் கொள்வது போலத் தோன்றினாலும், அது உண்மையில் தன்னுடைய வாலை உடல் வலியுடன் அறுத்துக் கொள்வதில்லை. வால் இல்லாத பல்லியைக் காணும்போதும், 'வாலறுந்த பல்லி' என்று சொல்கின்றனர். மற்ற உயிரினங்களுக்கு இல்லாத ஒரு அதிசய சக்தி பல்லிக்கு இருப்பதாகக் கேள்விப்படும் போது, நம்புவதே அரிதாக உள்ளது.

பல்லிக்கு, தான் விரும்பும் நேரத்தில் தனது வாலைக் கழற்றிப்போடும் திறன் உண்டு. தனக்கு ஆபத்து வருகிறது என்று தெரிந்தவுடன், உடனே தனது வாலைத் துண்டித்துக் கொள்கிறது. வால் தனியாகக் கழன்று விழுந்து துடிப்பதைப் பார்த்த எதிரி குழம்பிப் போய் இருக்கும்போது, எளிதில் தப்பித்துக்கொள்ள அதற்கு வசதியாக உள்ளது.

சிறிது நாட்களிலேயே அதற்கு வேறு ஒரு வால் முளைத்துவிடும் என்பதால், பல்லிக்கு அதன் வாலைத் துண்டித்து விடுவதால் எந்த இழப்பும் இல்லை.

(2).குட்டீஸ் கார்னர்

ஆசியக் குரங்குகளுடைய கை மனித கைகள் போலிருக்கும். எதையும் பற்றிக் கொள்ள வாலை இவற்றால் பயன்படுத்த முடியாது. அமெரிக்கக் குரங்குகள் இதற்கு நேர் மாறானவை. குரங்குகளில் 200 வகையுள்ளன. உருவிலும், தோற்றத்திலும் பெரும் வேறுபாடு உண்டு. பிக்மி மர்மோசெட் என்ற குரங்குதான் உருவில் மிகவும் சிறியது. அரை அடி நீளமே இருக்கும். மான்ட்ரில் எனப்படும் குரங்கு நான்கடி நீளம் இருக்கும். பழைய உலகக் குரங்குகளுக்கு 32 பற்களும், கீழ் நோக்கிய குறுகிய மூக்கும் இருக்கும். புதிய உலகக் குரங்குகளுக்கு 36 பற்கள்; அகன்ற இடைவெளி கொண்ட மூக்கு உள்ளவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us