தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மினி ஸ்டோரி - ராஜகுரு

மினி ஸ்டோரி - ராஜகுரு

மினி ஸ்டோரி - ராஜகுரு


PUBLISHED ON : ஆக 20, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 20, 2010


Follow on Google
அ நிறம் | அளவு

ஞானசீலன் என்பவர் ஒரு துறவி. அவருக்கும் சுகலவன் என்பவருக்கும் இளமைப் பருவத்திலிருந்து நட்பு இருந்து வந்தது.

அதன்பிறகு, ஞானசீலன் அரசனின் அழைப்பிற்கிணங்க ராஜ துறவியாக தேர்வானார். அதுமுதல் சுகலவன் அவரை விட்டு விலகி இருந்தார். ஆனால், துறவி மட்டும் தமது பழைய நண்பர் சுகலவனைச் சந்திக்க விரும்பினார்; பார்க்க விரும்பினார்; அதனால் அவருக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அந்தக் கடிதத்தில், 'நண்பர் சுகலவனுக்கு எழுதுவது என்னவென்றால், நம்முடைய பழைய உறவு, இப்போதும் இருக்கிறது. நான், ராஜகுருவான பிறகு என்னிடம் ஆசிபெற எனது நண்பர்கள் வந்தனர். அவர்களுக்கு நான் விலை உயர்ந்த அன்பளிப்புகள் கொடுத்தேன். ஆனால், நீர் இதுவரை வரவில்லை. அதனால் நான் வருத்தப்படுகிறேன். நானே உம்மிடம் வந்திருப்பேன். ஆனால், என் உயர் பதவிக்கு அது தகுந்த முறையன்று. ஆகையால், நீர் அவசியம் வரவேண்டும்!' என்று எழுதினார்.

அந்தக் கடிதம் சுகலவனுக்குக் கிடைத்தது. அக்கடிதத்தைப் படித்துவிட்டு வீசி எறிந்து விட்டார். உடனே அவருக்குப் பதில் கடிதமும் எழுதினார்.

அந்தக் கடிதத்தில், 'இறைவனுடைய ஏழையடியான், செல்வச் செழிப்புள்ள ராஜகுருவுக்கு எழுதியது. உமக்கும் எனக்கும் இனி தொடர்பு கிடையாது என்று நானே உமக்கு எழுதி விட்டேன். நீர் மக்களின் வரிபணத்தை உம்மை காண வரும் நண்பர்களுக்கு, பரிசாக கொடுப்பதும் அல்லாமல் என்னையும் இந்த பாவத்தில் பங்குபெற அழைக்கிறீர். இது நியாயமா?'

'நீர் செய்யும் காரியங்களை மனிதர்கள் பார்க்காமல் இருக்கலாம். ஆனால், இறைவன் பார்த்துக் கொண்டேயிருக்கிறார் என்பதை மறந்துவிடாதே. இந்த உலக சுகங்களை அனுபவித்துவிட்டு பரலோக சுகத்தை இழந்துவிடாதே நண்பா... உனக்காக பிராத்திக்கும் அன்பு நண்பன்' என்று எழுதினார்.

இதைப் படித்த ராஜகுரு பதவியை ராஜினாமா செய்துவிட்டு தியானம் செய்ய சென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us