
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
பிரண்டை - 150 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 7
தக்காளி - 2
நல்லெண்ணெய் - 100 மி.லி.,
வெந்தயம், மஞ்சள் துாள், மிளகாய் துாள், கருவேப்பிலை, புளி கரைசல் - தேவையான அளவு.
செய்முறை:
பிரண்டையை, கணு நீக்கி, சிறு துண்டுகளாக்கி நல்லெண்ணெயில் வதக்கவும். பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி, வெந்தயம், நறுக்கிய தக்காளி, துண்டாக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பின், வதக்கிய பிரண்டை, மஞ்சள், மிளகாய்த்துாள் போட்டு, புளிக்கரைசல் ஊற்றி, கொதிக்க விடவும். கெட்டி பதத்திற்கு வந்தவுடன் இறக்கவும்.
சுவைமிக்க, 'பிரண்டை கூட்டு' தயார். சோற்றுடன் பிசைந்து சாப்பிடலாம். உடல் நலம் காக்கும்.
- ஞா.அருள்மலர் செல்வி, சிவகங்கை.

