தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பிரண்டைதுவையல்!

பிரண்டைதுவையல்!

பிரண்டைதுவையல்!


PUBLISHED ON : ஜூலை 18, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 18, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

பிரண்டை - 1 கைப்பிடி

காய்ந்த மிளகாய் - 8

பூண்டு - 5 பல்

சின்ன வெங்காயம் - 5

உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

நெய், புளி, உப்பு, வெல்லம், கருஞ்சீரகம் - சிறிதளவு

பெருங்காயம், கடுகு, நல்லெண்ணெய், கருவேப்பிலை - தேவையான அளவு.

செய்முறை:

இளம் பிரண்டையை கணு நீக்கி, சிறு துண்டுகளாக்கி, எண்ணெயில் வதக்கி நன்றாக அரைக்கவும். வாணலியில், எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கருவேப்பிலை, பூண்டு, சீரகம் மற்றும் கருஞ்சீரகத்தை வறுக்கவும்.

இவற்றை அரைத்து, பிரண்டை விழுதுடன் சேர்த்து வதக்கவும். வெந்து கருநிறமானதும், எண்ணெய் பிரியும். அப்போது, சிறிது வெல்லம் சேர்த்து கிளறி இறக்கி, இரண்டு தேக்கரண்டி நெய் கலக்கவும். சுவைமிக்க, 'பிரண்டை துவையல்' தயார்.

இதை, 12 மணி நேரம் ஆற விட்டு, சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். வயிற்றில் தங்கும் புழு, பூச்சிகளை வெளியேற்றி நலம் காக்கும்.

- எம்.இந்திராணி, சிதம்பரம்.

தொடர்புக்கு: 93443 59484

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us