PUBLISHED ON : பிப் 03, 2012
அ நிறம் | அளவு
குழந்தைகள் வேகமாக பாலை உறிஞ்சிக் குடிக்கும் போது, பாலோடு சேர்த்து காற்றையும் விழுங்கும். அதனால் வயிறு உப்புசம் ஏற்பட்டு சிறிதளவுபாலை வாந்தி எடுக்கும். இதைப்பற்றி கவலைப்பட தேவை இல்லை. இதனை தடுக்க தாய்ப்பால் கொடுத்தவுடன் ஏப்பம் விடும் வரை குழந்தையை தோளின் மீது போட்டு தட்டினால் ஏப்பம் வரும். அல்லது நேராக வைத்திருந்தோ பத்திலிருந்து இருபது நிமிடங்கள் கழித்து குழந்தையை தொட்டிலிலோ அல்லது படுக்கையிலோ போடுவது நல்லது.
