PUBLISHED ON : பிப் 03, 2012

அ நிறம் | அளவு
புங்கை மரம் வேளாண்மைக்கு சிறந்த உரமாக பயன்படுகிறது. புங்கை மரத்தில், கரி நைட்ரஜன் 19:1 என்ற விகிதம் உள்ளது. எனவே, தழையிலுள்ள நைட்ரஜன் சத்து முழுமையாக பயிருக்கு கிடைக்கும். புங்கை எண்ணெயும், புங்கை புண்ணாக்கும் பயிர் பாதுகாப்புக்கு பயன்படுத்தலாம். புங்கைமரம் காற்றிலுள்ள ஐசோ சயனைடை உறிஞ்சிக் கொண்டு, நிறைய பிராண வாயுவை வழங்குகிறது. புங்கை எண்ணெயை எரிபொருளாகப் பயன்படுத்தலாம். இதன் பட்டை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
