
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமெரிக்காவின் பிரபல கோடீஸ்வரர் ராக் பெல்லர், தனது முதிய வயதிலும் கடுமையாக உழைப்பார். ஒவ்வொரு நாளும் நாடு விட்டு நாடு சென்று பல்வேறு பணிகளை கவனிப்பார்.
ஒருசமயம், விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த அவர், ஏதோ தீவிரமாக தயாரித்துக் கொண்டிருந்தார்.
அவர் அருகில் இருந்த இளைஞன், 'சார் நீங்கள் எவ்வளவோ உழைத்து மிகப்பெரும் கோடீஸ்வரர் ஆகிவிட்டீர். இன்னும் ஏன் இந்தத் தள்ளாத வயதிலும் கஷ்டப்பட வேண்டும்?' என்று கேட்டான்.
'தம்பி இந்த விமான ஓட்டி, விமானத்தை பறக்கச் செய்து மிக உயர்ந்த உயரத்துக்கு கொண்டு வந்துவிட்டார். இப்போது இஞ்சினை நிறுத்திவிட்டால் என்ன ஆகும்?' என்று கேட்டார் ராக் பெல்லர்.
இளைஞனுக்குப் பதில் தெளிவாகப் புரிந்தது