PUBLISHED ON : மே 22, 2015

அ நிறம் | அளவு
ஒரு மேஜிக்மேன் நாருடன் கூடிய தேங்காயை எடுத்து, தன் உள்ளங்கையில் சிறிது தண்ணீரை ஊற்றி, அதை தேங்காய் மீது தெளித்துவிட்டு நெருப்பு இல்லாமல் தீப்பற்ற வைத்தார். இந்த ரகசியத்தை உங்களுக்கு சொல்லட்டுமா குட்டீஸ்...
மேஜிக் காட்டுபவர் நமக்கு தெரியாமல் சுத்தமான, ஒரு சிறு துண்டு சோடியத்தை தேங்காய் நாரில் மறைத்து வைத்து விடுவார். பிறகு நம் முன் வைத்து சிறிது தண்ணீரை தேங்காய் நாரின் மீது தெளிப்பார். சோடியம் தண்ணீரில் கரைந்து தேங்காய் நார் முழு வதும் படர்ந்து விடும். சிறிது நேரத்திற்கு பிறகு ஹைட்ரஜனையும், சோடியம் ஹைட்ராக்சைடையும் உற்பத்தி செய்கிறது. இந்த வேதிவினை ஏராளமான வெப்பத்தை உற்பத்திசெய்கிறது. இங்கு உருவாக்கப் படும் ஹைட்ரஜன் வாயு தீப்பற்றி எரிகிறது. இதுதான் மேஜிக்.
இதுபோல நீங்களும் மேஜிக் செய்து நண்பர்களை அசத்தலாம்!
