PUBLISHED ON : மே 22, 2015

ஜாக் லாவான் என்ற சிறுவன் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது நோயாளி போல மெலிந்து மோசமாகக் காணப்பட்டான். மூக்கு கண்ணாடி அணிந்து கொண்டு மிகவும் அசிங்கமாகத் தோற்றமளித்த அவனை எல்லாரும் கிண்டல் செய்யவே, பள்ளிக்குச் செல்வதை நிறுத்தி விட்டான். வாழ்க்கையே இருளாகிப் போனதாக எண்ணி வீட்டில் முடங்கிக் கிடந்தான். அச்சமயம் அவன் ஒரு சொற் பொழிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.
உடல்நலம் பற்றிய அச்சொற் பொழிவில் உடற்பயிற்சி மூலம் எப்படி நலமாக வாழலாம் என்று பேசினார் ஒருவர். அந்தப் பேச்சு அவனைத் தூண்டியது; சிந்திக்க வைத்தது. வீட்டிற்கு வந்தவன் நன்றாக உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தான். தொடர்ந்து விடாது செய்தான்.
கலிபோர்னியா, ஓக்லேண்டு மாகாணங் களில் வீடு வீடாகச் சென்று புதிய உடற் பயிற்சிகள் செய்வது பற்றி எடுத்துரைத்தான். அமெரிக்காவின் பிரபலமான முதல் உடற்பயிற்சி மையத்தைக் தொடங்கி, 'மிஸ்டர் எக்ஸர்சைஸ்' என்று எல்லாராலும் பாராட்டப் பெற்ற அவர் தேசிய, சர்வதேச அளவில் சாதனையாளர்; கோடீஸ்வரர்.
ஒரே ஒரு சொற்பொழிவு இவரது வாழ்க்கையை மாத்திடிச்சி பார்த்தீர்களா? அதற்குதான் எப்போதும் நல்லதை கேட்கணும் என்பர்.
