தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சாக்கோ வால்நட் சீஸ் கேக்!

சாக்கோ வால்நட் சீஸ் கேக்!

சாக்கோ வால்நட் சீஸ் கேக்!


PUBLISHED ON : மே 20, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 20, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

ப்ளைன் சாக்லேட் - 225 கிராம், வெண்ணெய் - 75 கிராம், முட்டை - 4, பொடித்த சர்க்கரை - 300 கிராம், மைதா - 150 கிராம், உப்பு - அரை டீஸ்பூன், பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன், வெனிலா எசன்ஸ் - 2 டீஸ்பூன், வால்நட் பருப்பு - 115 கிராம்.

ப்ளைன் கலவைக்கு:

வெண்ணெய் - 50 கிராம், க்ரீம் சீஸ் - 175 கிராம், பொடித்த சர்க்கரை - 75 கிராம், முட்டை - 2, மைதா - 25 கிராம், வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்.

செய்முறை:

ப்ளைன் சாக்லெட்டை துருவி 75 கிராம் வெண்ணெயோடு சேர்த்து பால் குக்கரில் போட்டு அடுப்பில் வைத்து உருக்கி ஆறவிடவும். ஒரு பாத்திரத்தில் 4 முட்டையை உடைத்து ஊற்றி, அதோடு 300 சர்க்கரை சேர்த்து நுரைவர அடிக்கவும்.

150 கிராம் மைதா, அரை டீஸ்பூன் உப்பு, 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடரை ஒன்றாக கலந்து சலித்து, அதை முட்டை கலவையோடு சேர்த்து நன்கு புரட்டவும். சாக்லெட், வெண்ணெய் கலவையோடு வால்நட் மற்றும் 2 டீஸ்பூன் வெனிலா எசன்ஸை சேர்த்து கலக்கவும்.

பிறகு, அதோடு முட்டை கலவையை சேர்த்து நன்கு கலக்கவும். அடுத்து ப்ளைன் கலவைக்கான பொருட்கள் எடுக்கவும். வெண்ணெயையும், சீஸையும் சேர்த்து க்ரீம் பதத்திற்கு அடித்து கலக்கவும். முட்டை, சர்க்கரையை சேர்த்து நுரைக்க அடிக்கவும். அதோடு க்ரீம் கலவையை சேர்த்து கலக்கவும். பிறகு மைதா, எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது இருவிதக் கலவைகள் ரெடி.

வேண்டிய வடிவத்திற்கு ஒரு ட்ரேயை எடுத்து அதில் பரவலாக சிறிதளவு வெண்ணெயை தடவி, கொஞ்சம் சாக்லெட் கலவையை போடவும். பிறகு, அதன் மேல் ப்ளைன் கலவையை போடவும். இப்படியே சாக்லெட், ப்ளைன் கலவைகளை மாற்றி மாற்றி போட்டு கடைசியாக சாக்லெட் கலவையை வைத்து லேசாக பூசிவிடவும். பேக்கிங் அவனில் 180 டிகிரி சென்டிகிரேட் வெப்ப நிலையில் 40 முதல் 45 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். ஆறியவுடன் வில்லைகள் போடவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us