தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஒட்டக ஆராய்ச்சி

ஒட்டக ஆராய்ச்சி

ஒட்டக ஆராய்ச்சி


PUBLISHED ON : அக் 31, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 31, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேசிய ஒட்டக ஆராய்ச்சி நிலையம், ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் நகர் அருகே உள்ளது. நான்கு ரகத்தில், 350 ஒட்டகங்கள் இங்கு பராமரிக்கப்படுகின்றன.

ஜெய் சால்மர் ரகம், குதிரை போல், பந்தயங்களில் ஓடக்கூடியது. வெளிர் காவி நிறத்தில் இருக்கும். மெர்வாரி ரகம் நிறைய பால் தரும்; வெளிர் காவி மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். கச்சிச்சி ரகம் பால் உற்பத்திக்கு சிறந்தது.

இந்த ஆராய்ச்சி நிலையத்தில்...

* ஒட்டக பால் ஐஸ்கிரீம்

* ஒட்டக தோலில் செய்த பை, குல்லா, பர்சுகள்

* ஒட்டக எலும்பில் கைவினைப் பொருட்கள்

* ஒட்டக ரோமத்துடன் கலந்து நெய்யப்பட்ட பட்டு ஷால்கள்

* ஒட்டக பற்களில் கீ-செயின் போன்றவை விற்கப்படுகின்றன.

ஒட்டக சாணத்தில், மின்சாரம் தயாரிக்கும் முயற்சியும் நடக்கிறது. தினமும் அருகில் உள்ள தார் பாலைவனத்தில் ஒட்டகங்களை மேயவிடுவர்.

இங்குள்ள அருங்காட்சியகத்தில் ஒட்டகம் பற்றிய தகவல்களை அறியலாம். பிற்பகல் 2:30 முதல், மாலை 6:00 மணி வரை பார்வையாளரை அனுமதிப்பர்.

நுழைவு கட்டணம், 10 ரூபாய். புகைப்படம் எடுக்க கூடுதலாக, 20 ரூபாய் செலுத்த வேண்டும். வழிகாட்டி சேவையும் உண்டு. நான்கு பேரை கூட்டிச் செல்லும் வழிகாட்டிக்கு தரவேண்டியது, 30 ரூபாய்.

ஒரு ஒட்டகம் சராசரியாக, 30 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us