/
இணைப்பு மலர்
/
சிறுவர் மலர்
/
மேஜிக் செய்யலாமா? - தண்ணீரை ஈர்க்கும் பலூன்!
/
மேஜிக் செய்யலாமா? - தண்ணீரை ஈர்க்கும் பலூன்!
PUBLISHED ON : ஜூலை 22, 2016

இந்த மேஜிக் செய்வதற்கு தேவையான பொருட்கள்: 1.பலூன், 2.கம்பளித்துணி.
மேஜிக் செய்முறை: பலூனில் காற்றை ஊதி பெரிதாக்கிக் கொள்ள வேண்டும். பின், பலூனின் வாய்ப்புறத்தை நூலினால் இறுக கட்ட வேண்டும். அடுத்து கம்பளித் துணியால் பலூனில் மேல்புறத்தைத் தேய்க்க வேண்டும். தேய்த்த சூட்டோடு குழாயில் மெலிதாக விழும் தண்ணீர் அருகே எடுத்துச் செல்ல வேண்டும்.
அப்படி சென்றதும், குழாயிலிருந்து விழும் தண்ணீரை பலூன் தன்னை நோக்கி ஈர்க்கும். மேஜிக்கை பார்வையாளர்கள் ரசிப்பர். மேடையில் இந்நிகழ்ச்சியை செய்யும் போது, குழாய் உள்ள 'ட்ரம்' அல்லது குழாய் உள்ள 'கேன்' பயன்படுத்தலாம்.
இந்த மேஜிக்கின் ரகசியம்: பலூனின் மீது கம்பளித் துணியால் தேய்க்கிறோம் அல்லவா? அப்படி தேய்ப்பதால் அந்த உராய்வின் காரணமாக பலூன் மீது மின்காந்தம் ஏற்றப்படுகிறது.
பலூன் தேய்த்த சூட்டோடு கீழ் நோக்கி மெல்ல விழும் தண்ணீர் அருகே கொண்டு செல்லும்போது பலூனின் மேல்புறத்தில் உள்ள மின்காந்த சக்தி தண்ணீரை தன் பக்கம் ஈர்க்கும். இதுதான் பலூன் தண்ணீரை ஈர்க்கும் ரகசியம்.

