PUBLISHED ON : பிப் 24, 2017

தேவையான பொருட்கள்: இரண்டு பலூன், சிறிதளவு மண்ணெண்ணை, பஞ்சு அல்லது காட்டன் துணி.
செய்முறை:
முதலில் இரண்டு பலூன்களை ஊதி கொள்ளவும். அடுத்து, பஞ்சில் சிறிது மண்ணெண்ணையை நனைத்து கொள்ளவும்.
ஒரு பலூனை பார்வையாளர் ஒருவரிடம் கொடுங்கள். இன்னொரு பலூனை, நீங்கள் கையில் வைத்து கொள்ளுங்கள். இப்போது பார்வையாளர் கையிலுள்ள பலூனை, மேஜிக் மூலம் வெடிக்கச் செய்கிறேன் என்று சொல்லி, உங்கள் கையில் இருக்கும் பலூனை, சில வினாடிகள் உற்று பாருங்கள். திடீரென்று பார்வையாளர் கையில் இருக்கும் பலூன் பட்டென்று வெடிக்கும்.
இந்த மேஜிக்கை பார்த்து எல்லாரும் வியந்து போவர்.
இந்த மேஜிக் செய்யும் ரகசியம்:
மேஜிக் செய்யும் முன், எந்த பலூனை வெடிக்க செய்ய வேண்டுமோ... அந்த பலூனில் யாருக்கும் தெரியாமல் மண்ணெண்ணையை தடவவும். இந்த தந்திரம் தான் மேஜிக்கின் சிறப்பம்சம்.
பலூன் ஊதப்படும்போது, காற்றால் நிறைகிறது. அதில் தடவப்பட்ட மண்ணெண்ணையில் உள்ள வேதிப்பொருள், ரப்பருடன் வேதிவினை புரியும்போது, சூடு ஏற்பட்டு ரப்பர் இளகும்.
இளகிய இடத்தில் காற்று வெளியேற முயலும்போது பலூன் வெடிக்கும்... எப்புடி!
சூப்பரா உங்க பிரண்ட்ஸ் முன்னாடி செஞ்சி அசத்துங்க!
