/
இணைப்பு மலர்
/
சிறுவர் மலர்
/
சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கலாமா...
/
சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கலாமா...
PUBLISHED ON : பிப் 20, 2021

உணவு சாப்பிட்டதும் குளித்தால், உடலுக்கு கேடு ஏற்படும். அதற்கு அறிவியல் காரணமும் உள்ளது.
சருமத்தில் சேர்ந்த அழுக்கு, குளிக்கும் போது வெளியேறும். உடனே உடல் செல்கள் புத்துணர்வு பெற்று அதிக ஆற்றலுடன் இயங்கும். இதனால் தான், குளித்து முடித்ததும் பசி எடுக்கிறது.
உணவை ஜீரணிக்க நொதிகள் தேவை. சாப்பிட்டவுடன் குளித்தால் உடலில் குளிர்ச்சி தன்மையால் நொதிகள் சுரக்காது. அஜீரணத்திற்கு வழி வகுக்கும்.
சாப்பிட்டதும் குளித்தால், செரிமான மண்டல செயல்பாடு குறைந்து, மலச்சிக்கல் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
சாப்பிடும் போது, இடையே தண்ணீர் அருந்த வேண்டாம். சாப்பிடும் முன் அல்லது பின் தண்ணீர் அருந்த வேண்டாம். அருந்தினால், செரிமான சுரப்பிகளின் செயல்திறன் குறைந்து, உடல் ஆரோக்கியத்துக்கு பங்கம் ஏற்படும்.
சாப்பிடும் போது அல்லது சாப்பிட்ட பின், அதிகமாக தாகம் எடுத்தாலோ, விக்கல் ஏற்பட்டாலோ மட்டும், குறைந்த அளவில் தண்ணீர் குடிக்கலாம். இவ்வாறு செய்வதால், உடல் எடை அதிகரிக்காது.
சாப்பிட்டு, 30 நிமிடத்துக்குப் பின், தண்ணீர் அருந்தலாம்.
உணவுடன், மோர் மற்றும் தயிர் உட்கொள்ளலாம். இது உடலுக்கு குளிர்ச்சி தரும்; செரிமானத்திற்கு உதவும்.
மூளை சுறுசுறுப்பாக இயங்க தண்ணீர் முக்கியமானது.
வேலை நேரத்திலும், சோர்வின் போதும், தண்ணீர் பருகுவதால், மூளை சுறுசுறுப்பாகும்.
காலை வேளையில், அதிகம் தண்ணீர் அருந்தினால், உடலில் வறட்சி ஏற்படாது; மாலையில், குறைவாக தண்ணீர் அருந்தினால் இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் தொந்தரவு ஏற்படாது.
தண்ணீரில், எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்தால், உடலில் சக்தி அதிகரிக்கும்; நச்சு அழிந்து, உடல் உறுப்புகள் சிறப்பாக செயல்படும்.
- வ.முருகன்

