/
இணைப்பு மலர்
/
சிறுவர் மலர்
/
ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (16)
/
ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (16)
PUBLISHED ON : ஜூலை 15, 2016

ஹலோ ஸ்டூடன்ட்ஸ்... குட் மார்னிங், ஒழுங்கா 'ஹோம் ஒர்க்' எல்லாம் பண்றீங்களா? 'சம்மர்ல கோச்சிங் க்ளாஸ் எங்கும் போகல, வர்ஷிதா மிஸ் அந்தக் குறையை தீர்த்துட்டாங்க' என்று எழுதியிருந்த வாசக அன்பர்களுக்கு என் நன்றிகள் பல...
சரி... பாடத்துக்கு போலாமா? Simple present ஐ பயன்படுத்தி இரண்டு, மூன்று வார்த்தைகளில் ஆங்கில வாக்கியங்களை அமைப்பது எப்படி என்று கத்துக்கிட்டீங்க. சரி. அடுத்து பொதுவாக வாக்கியங்கள் நான்கு வகைப்படும். அவை
Positive Sentence - உடன்பாடு வாக்கியம், Negative Sentence - எதிர்மறை வாக்கியம், Interrogative Sentence - கேள்வி வாக்கியம், Exclamatory Sentence - வியப்பு வாக்கியம் என்பதாகும்.
இவற்றில் வாக்கியங்கள் அமைப்பது எப்படி என பார்க்கலாமா?
முதலில் Positive Sentence. அதாவது உடன்பாடு வாக்கியம். இதில் இதுவரை நீங்கள் கற்றுக்கொண்ட வாக்கியங்கள் எல்லாமே Positive Sentence தான். உதாரணமாக:
நான் பாடினேன் - Positive
நான் பாடவில்லை - Negative
நீ பாடினாயா? - Interrogative
ஆ! நீ பாடினாயா? - Exclamatory Sentence
இப்போ புரியுதா?
சரி! இப்போ Positive வாக்கியங்களை Negative ஆக மாற்ற Helping verbகளை பயன்படுத்த வேண்டும். அதான் Do, does, did என்ற Helping verbகளைச் சேர்த்து , Not சேர்த்தால் போதும்.
Present tense வாக்கியமாக இருந்தால்,I, we, you, they இவைகளுடன் do என்ற Helping verbஐ சேர்க்க வேண்டும். He, she, it போன்ற Present tense, Positive வாக்கியங்களை Negative ஆக மாற்ற, Does என்ற Helping verb பயன்படுத்த வேண்டும் என்பதை மறந்துடாதீங்க.
உதாரணமாக:
இன்னும் ஒரு விஷயம் Main verb த Positive வாக்கியங்களை Negative ஆக மாற்ற Helping verbs களை பயன்படுத்தக் கூடாது.
She is a house wife - அவள் ஒரு இல்லத்தரசி.
She is not a house wife - அவள் இல்லத்தரசி இல்லை.
இங்கே Do, does, did என்ற Helping words தேவையில்லை. Not மட்டும் சேர்த்தால் போதும்.
இங்கே Main verb இடம் பெறவில்லை. So, இதை Negativeஆக மாற்ற, வெறும் Not மட்டும் சேர்த்தால் போதும். சரியா?
Positive Sentence - Negative sentence
I like நான் விரும்புகிறேன் - I don't like நான் விரும்பவில்லை
They ask me அவர்கள் என்னை கேட்கின்றனர் - They don't ask me அவர்கள் என்னை கேட்கவில்லை.
I like idly எனக்கு இட்லி பிடிக்கும் - I don't like idly எனக்கு இட்லி பிடிக்காது
You write english நீ ஆங்கிலம் எழுதுகிறாய் - you don't write english நீ ஆங்கிலம் எழுதவில்லை
He comes here அவன் இங்கே வருகிறான் - He does not come here அவன் இங்கே வருவதில்லை
எழுதிப் பழக வார்த்தைகள்!
நான் போகிறேன் - I go
நான் போவதில்லை - I don't go
அவர்கள் விரும்புகின்றனர் - They like
அவர்கள் விரும்பவில்லை - They don't like
அது ஓடுகிறது - It runs
அது ஓடவில்லை - It does not run
நாங்கள் கிரிக்கெட் விளையாடுகிறோம் - We play cricket
நாங்கள் கிரிகெட் விளையாடுவதில்லை - We don't play cricket
இன்றைக்கு பாடம் ஓவர். நீங்களாகவே சில Negative வார்த்தைகளை எழுதிப் பழகுங்க... சரியா?
- bye! bye varshitha miss.

