/
இணைப்பு மலர்
/
சிறுவர் மலர்
/
ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (18)
/
ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (18)
PUBLISHED ON : ஜூலை 29, 2016

ஹலோ... ஸ்டுடண்ட்ஸ்... ஹவ் ஆர் யு? எனக்கு சின்னப் பசங்களில் இருந்து பெரியவர்கள், இல்லத்தரசிகள் முதல் மாணவர்களாக இருப்பதில் மிகுந்த சந்தோஷம்.
'மம்மி உனக்கு இங்கிலீஷ் தெரியல... என கேவலப்படுத்தும் என் பிள்ளைகள் முன், என்னை கவுரவப்படுத்திட்டீங்க வர்ஷி மிஸ்... இப்போ அவர்களது சந்தேகத்தை கூட நான் பூர்த்தி செய்கிறேன்... என் பிள்ளைகள் என்னை பார்த்து ஆச்சரியப்படுகின்றனர். தேங்க்யு மிஸ்...' என பாராட்டி தள்ளிய வாசக, வாசகிய அன்பர்களுக்கு என் நன்றி!
சரி... Simple Present tense ல், Positive, Negative பார்த்தோம், Question type வாக்கியங்கள் அமைப்பது பற்றி சொல்லித் தர்றேன் ஓ.கே!
இப்போ கேள்விகள் இரண்டு வகைப்படும். ஒன்று Yes or no type இன்னொன்று Information type question. புரியும்படி சொல்றேன்.
Do you play cricket? - நீ கிரிக்கெட் விளையாடுகிறாயா?
இதற்கு Yes - ஆமாம் என்றோ No - இல்லை என்றோதான் பதிலளிக்க முடியும்.
இந்த மாதிரி கேட்கப்படுபவைதான் Yes or no type question.
அடுத்து வருவது Information question type. அதாவது நீங்க என்ன செய்றீங்க? எங்கே இருக்கீங்க? ஏன் வேலையை விட்டுட்டீங்க? இப்படி கேட்கப்படும் கேள்விகளைத்தான் Information question type அல்லது 'Wh' Question type என்கிறோம்.
அதாவது, What?, when?, why?, who?, which?
இப்படி 'Wh' என்ற எழுத்துக்களை கொண்டு அமைவதால், இப்படிப் பெயர் வந்தது. சரியா?
இந்த வகை வாக்கியங்களை அமைக்க,
Question word + Helping word + Subject + verb
What + do + you + want?
இத்தகைய Question word அருகில் கண்டிப்பாக, Helping verb வர வேண்டும்.
சில மாதிரிகள் தருகிறேன். அவற்றை நன்கு எழுதிப் பார்த்து பழகிக் கொள்ளுங்கள். சரியா!
இப்படியே நீங்களும் எழுதிப் பழகுங்கள். சரியா? எழுதி, எழுதிப் பார்த்தால்தான் இவை உங்களது மூளையில் பதியும். அப்பதான் உங்களால் ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியும். சரியா?
Question word - Helping verb - Subject - Verb or Adverb, Object
What - do - you - want?
உனக்கு என்ன வேண்டும்?
what - do - you - have?
நீ என்ன வைத்திருக்கிறாய்?
when - do - you - go to school?
நீ எப்போது பள்ளிக்கு செல்கிறாய்?
what lesson - do - we - read?
நாம் என்ன பாடத்தை வாசிக்கிறோம்?
Why - do - you - get angry?
நீ ஏன் கோபப்படுகிறாய்?
Which - do - they - buy?
அவர்கள் எதை வாங்குகின்றனர்?
Which - do - we - count?
நாம் எதை எண்ணுகிறோம்.
Whom - do - you - want to meet?
நீங்கள் யாரைச் சந்திக்க வேண்டும்?
How much - do - you - want?
உனக்கு எவ்வளவு வேண்டும்?
பை! பை! வர்ஷி மிஸ்!

