/
இணைப்பு மலர்
/
சிறுவர் மலர்
/
ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (19)
/
ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (19)
PUBLISHED ON : ஆக 05, 2016

ஹாய்... எல்லாரும் நலமா? ரொம்ப... ரொம்ப ஆர்வமா ஆங்கிலம் கத்துக்குறீங்க... உங்களது கடிதங்களை படிக்கும் போது, எனக்கும் சொல்லிக் கொடுக்கும் ஆர்வம் அதிகரிக்கிறது தெரியுமா? 'ரொம்ப ஆழமா பாடம் சொல்லித் தர்றீங்க. வர்ஷி மிஸ்... எங்களுக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு' என்று எழுதியிருந்தீங்க... தேங்க்ஸ் பார் யுவர் லவ் அண்ட் அபெக் ஷன்ஸ்... சரி பாடத்துக்கு போலாமா?
Simple Present tenseல் கேள்வி வாக்கியங்கள் அமைப்பது பற்றி படித்தோம் இல்லயா... இன்று Exclamatory sentence, tag question இரண்டும் பார்க்கப் போறோம்.
கேள்வி வாக்கியங்களிலேயே ஒருவகை உள்ளது. அவைதான், 'ஒட்டுக் கேள்விகள்' என அழைக்கப்படும், Tag questions. என்ன முழிக்கிறீங்களா? இதென்னடா புதுப் பிரச்னை என்றுதானே நினைக்கிறீங்க...
ரொம்ப சிம்பிள் இது. அதாவது ஒரு வாக்கியத்தின் கடைசியில் வால்போல் வருவதுதான், Tags எனப்படும். அதாவது Do i? Don't we? இப்படி வருவதுதான் Tag questions எனப்படும்.
எந்த ஒரு Auxiliary verb ஐ வைத்தும் Tag questions உண்டாக்கலாம்,
உதாரணங்கள்:
I like, don't i?
நான் விரும்புகிறேன்; விரும்பவில்லையா என்ன?
I love mom, don't i?
நான் அம்மாவை நேசிக்கிறேன்; நேசிக்கவில்லையா என்ன?
She works hard, doesn't she?
அவள் கடினமாக வேலை செய்கிறாள்; செய்யவில்லையா என்ன?
He doesn't like ice-cream, does he?
அவன் ஐஸ்க்ரீமை விரும்பவில்லை; விரும்புகிறானா என்ன?
They do agree it, don't they?
அவர்கள் இதை ஏற்றுக் கொள்கிறார்கள்; ஏற்றுக் கொள்ளவில்லையா என்ன?
It doesn't rain, does it?
மழை பெய்யவில்லை; பெய்கிறதா என்ன?
இப்போ புரிஞ்சுதா? - இதில், முதலில் வரும் Positive Aux verbக்கு Opposite Aux verb (Negative) பிற்பகுதியில் சேர்க்க வேண்டும். அப்புறம் முதல் பகுதியில் Do வந்தால் பிற்பகுதியில் Don't வரவேண்டும். முதல் பகுதியில் Don't வந்தால் பிற்பகுதியில் Do வரவேண்டும்.
அதாவது முற்பகுதிக்கு, பிற்பகுதி, எதிர் மறையாகவும், கேள்வியாகவும் இருக்க வேண்டும். சரியா?
Exclamatory Sentence வாக்கியங்கள் அதாவது, ஆச்சரிய வாக்கியங்கள் சிலவற்றை தருகிறேன். அதை படித்து மனதில் பதிய வைத்து, மேலும் சிலவாக்கியங்களை எழுதிப்பழகுங்கள்.
1. What a beautiful flower it is?
இந்த மலர் எவ்வளவு அழகாக இருக்கிறது?
2. What a brilliant girl she is?
இந்த சிறுமி எவ்வளவு புத்திசாலியாக இருக்கிறாள்?
3. How beautiful is moon!
நிலா எவ்வளவு அழகாக இருக்கிறது.
4. Hurrah... i won the match!
ஆஹா! நான் போட்டியில் ஜெயித்து விட்டேன்!
5. What a wonderful creature an elephant is!
யானை என்னவொரு அற்புத படைப்பு!
இந்த வாரம் இவை இரண்டையும் நல்லா பிராக்டிஸ் பண்ணுங்க. அடுத்த வாரம் சந்திப்போம்.
Until then bye bye, varshitha miss.

