sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

சிவப்பு பெயிண்ட்!

/

சிவப்பு பெயிண்ட்!

சிவப்பு பெயிண்ட்!

சிவப்பு பெயிண்ட்!


PUBLISHED ON : ஆக 05, 2016

Google News

PUBLISHED ON : ஆக 05, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுக்குடி என்னும் ஊரில் பாஸ்கர் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் முட்டாளாக இருந்தான்.

ஒருநாள் -

பறவைகள் விற்கும் பெரிய கடை ஒன்றில் நுழைந்தான் பாஸ்கர். ஒவ்வொரு பறவையாகப் பார்த்தபடியே வந்தான்.

''உங்களுக்கு மயில் வேண்டுமா? குயில் வேண்டுமா? மைனா வேண்டுமா? கிளி வேண்டுமா? உலகத்தில் எந்த மூலையில் இருக்கும் பறவையானாலும் சொல்லுங்கள் தருகிறேன்,'' என்று பெருமையுடன் சொன்னான் கடைக்காரன்.

''எனக்குச் சிவப்பு நிறக் கிளி வேண்டும்,'' என்றான் பாஸ்கர்.

''சிவப்பு நிறக் கிளியா?'' என்று வியப்புடன் கேட்டான் கடைக்காரன்.

''ஆமாம். எனக்கு சிவப்பு நிறக் கிளிதான் வேண்டும். என்ன விலையானாலும் தருகிறேன். உங்களிடம் இருக்கிறதா?'' என்று கேட்டான் பாஸ்கர்.

வந்தவன் முட்டாள் என்பது கடைக் காரனுக்குப் புரிந்தது.

''இருந்த சிவப்பு நிறக் கிளிகள் எல்லாம் விற்று விட்டன. சிவப்பு நிறக் கிளி உடனே வரும் வாய்ப்பும் இல்லை. பச்சை நிறக் கிளிகள் தான் உள்ளன. விலை குறைத்துத் தருகிறேன். வாங்கிச் செல்லுங்கள்,'' என்றான்.

''எனக்குச் சிவப்பு நிறக் கிளிதான் வேண்டும். வேறு கிளி வேண்டாம்,'' என்றான்.

''உங்களுக்குச் சிவப்பு நிறக் கிளி கிடைக்க நான் ஒரு வழி சொல்கிறேன்,'' என்றான் கடைக்காரன்.

''என்ன வழி?'' என்று ஆர்வத்துடன் கேட்டான் பாஸ்கர்.

''பச்சைக் கிளி ஒன்றை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். அத்துடன் நான் சிவப்புப் பெயின்ட் டப்பா ஒன்றைத் தருகிறேன். வீட்டிற்குச் சென்றதும் பச்சைக் கிளியின் மீது சிவப்புப் பெயின்டை அடித்து விடுங்கள். அது சிவப்பு நிறக் கிளியாகி விடும். பச்சைக் கிளிதான் சிவப்புப் கிளியாக இருப்பது யாருக்கும் தெரியாது,'' என்று சொன்னான் கடைக்காரன்.

கடைக்காரன் சொன்ன வழி அவனுக்குப் பிடித்திருந்தது. ''ஒரு பச்சைக் கிளி என்ன விலை?'' என்று கேட்டான்.

''இது அருமையான பச்சைக் கிளி. நாம் பேசுவதை அப்படியே திரும்பப் பேசும். விலை ஆயிரம் ரூபாய்தான். நீங்கள் இதை வாங்கினால் சிவப்புப் பெயின்ட் டப்பாவை இனாமாகவே தருகிறேன்,'' என்றான் கடைக்காரன்.

ஆயிரம் ரூபாய் கொடுத்து அந்தக் கிளியையும், சிவப்பு பெயின்ட் டப்பா வையும் வாங்கியவாறு புறப்பட்டான்.

மறுநாள் -

அந்தக் கடைக்குக் கண்ணில் கண்ணீர் வழிய வந்தான் பாஸ்கர்.

''என்ன நடந்தது?'' என்று கேட்டான் கடைக்காரன்.

''நேற்று உங்களிடம் வாங்கிச் சென்றேனே, அந்தக் கிளி இறந்து விட்டது,'' என்று அழுது கொண்டே சொன்னான்.

''அந்தக் கிளி நன்றாகத்தானே இருந்தது. அதற்குள் எப்படி இறந்திருக்க முடியும்? சிவப்பு நிறப் பெயின்ட் அடித்ததாலா இறந்தது? நம்ம முடியவில்லையே... என்ன நடந்தது? சொல்லுங்கள்,'' என்று பரபரப்புடன் கேட்டான் கடைக்காரன்.

''கிளியை வீட்டிற்கு எடுத்துப் போனேன். அதன் மேல் சிவப்புப் பெயின்ட் அடிக்கணும்னு நினைச்சேன். முதல்லே அது மேலே இருக்கிற பச்சைப் பெயின்டை எடுத்துட்டா நல்லதுன்னு பட்டது. பச்சை பெயின்டை சுரண்டினேன். ஏற்கனவே, பெயின்ட் அடிச்சவன் நல்லா அடிச்சிருக்கான். கொஞ்சம் கூடப் பெயின்ட் எடுக்க வரல்லே.

''கிளியை நெருப்பில் காட்டினால் அது மேலே இருக்கிற பச்சை பெயின்ட் லேசா உருகும். சுரண்டி எடுத்துடலாம்னு நினைச்சி, அந்தக் கிளியை நெருப்பில சூடு காட்டினேன். அதில்தான் கிளி இறந்து விட்டது...'' என்று அழுதபடியே சொன்னான் பாஸ்கர்.

இதைக் கேட்டு அதிர்ந்து போனான் கடைக்காரன்.

நீதி: முட்டாளா இருக்காதீங்க.






      Dinamalar
      Follow us