/
இணைப்பு மலர்
/
சிறுவர் மலர்
/
ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (23)
/
ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (23)
PUBLISHED ON : செப் 02, 2016

ஹாய்... ஹாய்... மாணவாஸ்... ஹவ் ஆர் யு? உங்களது, 'இங்கிலீஷ்' ஆர்வத்துக்கு அளவே இல்லாம போச்சு... தாத்தா, பாட்டிகள், கல்லூரி மாணவ- மாணவியர் மற்றும் குடும்பப் பெண்கள் என பலரும் இந்தப் பகுதியை விரும்பி படிப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது...
சரி! இன்றைக்கு நாம என்ன படிக்கப் போறோம் தெரியுமா? Simple pastenseல் கேள்விகள் அமைப்பது எப்படின்னு பார்க்கப் போறோம். Are you ready?
Did you write the answer? நீ பதிலை எழுதிவிட்டாயா? என்று கேட்டால், ஆம், இல்லை என பதில் சொல்வோம். இல்லையா? Spoken Englishல் இப்படிப்பட்ட கேள்விகளை Yes or No Type Questions என கூறவேண்டும்.
மேலும், Did you write the answer? என்ற கேள்விக்கு Yes, I wrote என்று சொல்ல வேண்டும். பதிலாக Yes, I write என்று சொல்லக் கூடாது.
அதாவது கேள்வியானது Past tenseல் இருந்தால் பதிலும் Past tenseல்தான் இருக்க வேண்டும். இந்த விதி இலக்கணத்திற்கு மட்டும்தான். Spoken Englishல் வேறு மாதிரி இருக்கும்.
அடுத்து, wh - question எப்படி அமைப்பது என்று கத்துக்கோங்க!
wh கேள்விகளை அமைக்க When, Where, What போன்ற சொற்களை பயன்படுத்த வேண்டும்.
I bought a house? நான் வீடு வாங்கினேன்.
எப்போது வாங்கினாய்? When did you buy?
எப்படி வாங்கினாய்? How did you buy?
எவ்வளவு ஆச்சு? How much did it cost?
I escaped நான் தப்பித்தேன் என்று ஒருவர் சொன்னால் How did you escape? நீ எப்படித் தப்பித்தாய்? What happened? When did you escape? இப்படி கேள்விகள் கேட்கப்படுவை Information Questions ஆகும்.
நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டியது என்ன தெரியுமா?
எல்லா Question word களுடனும் Did சேரும். ஆனால், who என்ற Question word அருகில் மட்டும் Helping verb ஆன did சேர்க்கக்கூடாது.
-உதாரணம்:
Who broke the cups?
யார் 'கப்'களை உடைத்தது?
Who took my pen?
யார் என்னுடைய பேனாவை எடுத்தது.
Who gave this dress to you?
இந்த உடையை உனக்கு கொடுத்தது யார்?
Where did you go yesterday?
நேற்று நீ எங்கே போனாய்?
When did you see him?
நீ அவனை எப்போது பார்த்தாய்?
Whom did you meet yesterday?
நேற்று நீ யாரைச் சந்தித்தாய்?
Where did you by umbrella?
நீ குடையை எங்கு வாங்கினாய்?
Which did she like?
அவள் எதை ஆசைப்பட்டாள்?
Where did she stay?
அவள் எங்கு தங்கினாள்?
இப்ப புரியுதா
இதே மாதிரியை பயன்படுத்தி நீங்களும் பல கேள்வி வாக்கியங்களை எழுதிப் பழகுங்க. சரியா? இதுதான் உங்களது ஹோம் ஒர்க்!
Until then bye! bye!
Varshita miss