
பரீட்சை நேரத்தில்...
கடவுள் என்பது நம் பெற்றோருக்கு பின் நாம் அணுகுவது. பரீட்சை நேரத்தில் சிறுவர்களின் பக்தி ரொம்ப ரொம்ப அதிகமாகும். 'பிள்ளையார்' என்னும் பெயரை கேட்டவுடனே அனைவரின் மனமும் ஆனந்தப் படும். அவரின் உருவம் மேலும், நமக்கு பேரின்பம் நல்கும்.
செய்யக் கூடாதவை!
விநாயகர் சதுர்த்தியன்று மதியம் தூங்க கூடாது. கருப்பு நிற ஆடைகளை அணியக் கூடாது. மது, வெற்றிலை, பாக்கு தொடக்கூடாது, போடவும் கூடாது.
இங்கே மட்டுமல்ல!
இந்தியாவின் பழமை வாய்ந்த வழிபாடாகவும், விழாவாகவும் விநாயகர் சதுர்த்தி திகழ்கிறது. இத்தகைய விநாயகர் வழிபாடு இந்தியாவில் மட்டுமின்றி, பல்வேறு உலக நாடுளிலும் கொண்டாடப்படுகிறது. மேலும், உலக நாடுகளின் பல்வேறு ஆராய்ச்சிகளில் விநாயகர் உருவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உலகின் மிக முக்கியமான தெய்வ வழிபாடாக விநாயகர் சதுர்த்தி விளங்குகிறது.
ஆறிலேயே ஆனைமுகனா!
ஜப்பான் நாட்டில், 'காங்கிடெக்' என்ற புத்தமத கடவுளுடன் விநாயகர் சிலைகள் வணங்கப்படுகின்றன. விநாயக க் ஷா கவான்மின்ஷோ என்ற பெயர்களின் அழைக்கின்றனர். கி.பி., 6ம் நூற்றாண்டிலேயே இங்கு விநாயகர் வழிபாடு உள்ளதாக அறியப்படுகிறது.
எங்கும் எங்கெங்கும்!
இலங்கையில், 'முனிவண்டி விநாயகர் கோவில்' உள்ளது. மேலும், கும்ப விழா விநாயகர் கோவில் மிக சிறப்பு வாய்ந்த கோவிலாக திகழ்கிறது.
ரஷ்யாவில் அஜர்பைஜான், ஆர்மினியா போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அங்கும் விநாயகர் வழிபாடு சிறந்து இருந்தமைக்கு சான்றாக விளங்குகின்றன.
நேபாள நாட்டிலும் விநாயகர் வழிபாடு சிறந்து விளங்குகிறது. இவையன்றி தமிழர்கள் கால் பதித்த சிங்கப்பூர். மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் விநாயகர் வழிபாடும், விநாயகர் சதுர்த்தி விழாவும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
சொர்க்கத்தின் சாவி!
எகிப்து நாட்டில் விநாயகரை போருக்கும், அமைதிக்கும் உரிய கடவுளாக கருதுகின்றனர். இங்கு, 'கேதேஸ்' என அழைக்கின்றனர். சொர்க்கத்தின் சாவி வைத்திருப்பவராக விநாயகர் காணப்படுகிறார். இங்கு கண்டெடுக்கப்பட்ட விநாயகர் உருவங்கள் வாடிகன் அருங்காட்சியகத்தில் காணப்படுகின்றன.