தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (24)

ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (24)

ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (24)


PUBLISHED ON : செப் 09, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 09, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹாய்... ஹாய்... ஆர்வமுடன் பாடம் படிக்கும் அன்பு மாணவர்களுக்கு என் அன்பு வணக்கம்! சேலையூரைச் சேர்ந்த அனுராதா என்ற 9ம் வகுப்பு மாணவி, எனக்கு ஆங்கிலத்திலேயே கடிதம் எழுதி அசத்தியிருக்காங்க. இந்த பகுதியின் மூலம் அவங்க எப்படி ஆங்கிலம் கத்துக்கிட்டாங்கன்னு சொல்லியிருந்தாங்க. கேட்கவே ரொம்ப இன்பமாக இருக்கு... சரி! பாடத்துக்குப் போலாமா?

Simple Futureல் வாக்கியங்களை அமைப்பது எப்படி என்று பார்ப்போமா?

'எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் செயல்களைப் பற்றி அறிவிக்க Future Tense பயன்படுத்த வேண்டும்.

1. She will call you.

அவள் உன்னை அழைப்பாள்.

2. Raghu will come there.

ரகு அங்கு வருவான்.

3. Shalu will pass the test.

ஷாலு தேர்வில் வெற்றி பெறுவாள்.

4. They will go - அவர்கள் போவார்கள்.

5. It will go - அது போகும்.

இப்படி Main verbவுடன் will /shall உபயோகித்து Simple Future வாக்கியங்களை அமைக்க வேண்டும்.

முன்பெல்லாம் I, we அருகில் Shall என்ற வார்த்தையை பயன்படுத்துவது வழக்கம். இப்போ அந்த, 'பேஷன்' போயிடிச்சி... மார்டன் இங்கிலீஷ்ல, Will போதும்.

ஒரு சில மாதிரி வாக்கியங்கள்:

1. Hema will resign the job.

ஹேமா வேலையை ராஜினாமா செய்வாள்.

2. Kishore will buy a computer.

கிஷோர் கம்ப்யூட்டர் வாங்குவான்.

3. India will win the game.

இந்தியா விளையாட்டில் வெற்றி பெறும்

4. It will rain tomorrow.

நாளை மழை பெய்யும்.

5. Anita will preside over the meeting.

அனிதா கூட்டத்தை தலைமை தாங்குவாள்.

இன்னொரு விஷயம் ஸ்டூடண்ட்ஸ்... ஒரு செயல் நிகழப்போகிறது என்பதை குறிக்க Subjectக்கு பின் am / is / are + going to + verb உபயோகிக்கலாம்.

1. He is going to buy a car.

அவன் ஒரு கார் வாங்கப் போகிறான்.

2. I am going to join a new course.

நான் ஒரு புது கோர்ஸ் சேரப் போகிறேன்.

3. She is going to study engineering

அவள் பொறியியல் படிக்க போகிறாள்.

இப்படிச் சொல்ல வேண்டும். சரியா?

அடுத்து Simple Futureயில் Negative வாக்கியங்களை அமைக்கப் போறோம். சரியா? இது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததுதான்.

Not சேர்க்க வேண்டியதுதான்.

Negative Sentense

I will go நான் போவேன். - I will not go நான் போக மாட்டேன்.

He will go அவன் போவாள். - He will not go அவன் போக மாட்டான்.

They will go அவர்கள் போவார்கள். - They will not go அவர்கள் போக மாட்டார்கள்.

She will accept அவள் ஏற்றுக்கொள்ளுவாள். - She will not accept அவள் ஏற்றுக்கொள்ள மாட்டாள்.

Will not என்பதை சுருக்கமாக won't (வோன்ட்) என்று சொல்வோம். சரியா?

டைம் ஆயிடுச்சு, பை! பை!

வர்ஷிதா மிஸ்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us