PUBLISHED ON : செப் 16, 2016

ஹாய்... ஹாய்... ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா படிக்கிறீங்கன்னு வர்ற லெட்டர்ஸ் வெச்சு நான் தெரிஞ்சுக்கிட்டேன்.
Simple Future வாக்கியங்களை Negativeஆக மாற்ற Not என்பதை மட்டும் இணைத்தால் போதும்னு போன வாரம் படிச்சோம் இல்லையா?
அடுத்ததாக Question களை எப்படி அமைக்க வேண்டும் என்பதை பார்ப்போமா?
Helping verb + Subject + Verb
இப்படித்தான் அமைக்க வேண்டும்.
H - S - V
Will - you - go - நீ போவாயா?
Will - she - accept - அவள் ஏற்றுக் கொள்வாளா?
Will - it - rain - மழை வருமா?
இப்படி நிறைய வாக்கியங்களை எழுதிப் பழகுங்கள். சரியா?
Shall - என்பதை பயன்படுத்தி சில வாக்கியங்களை சொல்லித் தர்ரேன். சரியா? Shall என்பது அனுமதி கேட்கப் பயன்படுத்துவோம்.
உதாரணமாக:
Shall I use your telephone? - - உன்னுடைய டெலிபோனை நான் உபயோகிக்கலாமா?
Shall I come in? -- நான் உள்ளே வரலாமா?
Shall - என்பதை இன்னது செய்வேன் என்ற கருத்தை தெரிவிக்கவும் பயன்படுத்தலாம்.
I shall study well - நான் நன்றாகப் படிப்பேன்.
I shall be punctual -- நான் நேரம் தவறாது இருப்பேன்.
You shall study well - நீ நன்றாகப் படிக்க வேண்டும்.
She shall sing now - அவள் இப்போது பாட வேண்டும்.
He shall buy the pen - அவன் பேனா வாங்க வேண்டும்.
They shall send the letter - அவர்கள் கடிதம் அனுப்ப வேண்டும்.
Should என்பது Shallன் இறந்தகால துணை வினைச் சொல்.
1.She should win - அவள் வெல்ல வேண்டும்.
2.You should be calm -- நீ அமைதியாக இருக்க வேண்டும்.
3. I should prove - நான் மெய்பிக்க வேண்டும்.
அடுத்து, 'முடியும்' என்ற நிலையை தெரிவிக்க, Can - Could என்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்.
I can write - என்னால் எழுத முடியும்.
We can swim - எங்களால் நீந்த முடியும்.
இதே போல், நிறைய துணைவினைச் சொற்கள் உள்ளன. அவற்றை பற்றி அடுத்த வகுப்பில் பார்ப்போமா?
பை! பை! வர்ஷிதா மிஸ்!
