தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (28)

ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (28)

ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (28)


PUBLISHED ON : அக் 07, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 07, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹாய்... ஹாய்... ஹவ் ஆர் யு? நீங்க எல்லாரும் ரொம்ப விரும்பி பாடம் படிக்கிறீங்க. ரொம்ப சந்தோஷம்! - பழைய விளாங்குடியை சேர்ந்த வாசகி மீனாட்சி, லட்சுமி பாஸ்கரன், மதுரை. இவர்கள் எல்லாம் கடிதம் மூலம் பாராட்டினாங்க.

இன்றைக்கு, Present perfect பற்றி படிக்கப் போறோம். ஆர் யு ரெடி?

சற்று நேரத்திற்கு முன் நடந்து முடிந்த செயல்களை குறிப்பிட, Present perfect ஐ பயன்படுத்த வேண்டும்.

Present perfect ஐ பயன்படுத்தும்போது, Have அல்லது Has பயன்படுத்த வேண்டும். இந்த, Have, Has அருகில், முன்பே கொடுத்துள்ள Past participlesயை பயன்படுத்த வேண்டும். சரியா?

Past participleனா என்னன்னு ஞாபகம் இருக்கா?

உதாரணம்:

Present - Past - Past participle

Go - went - gone.

இதில் gone என்பது Past participle சரியா?

Present perfectல் வாக்கியம் அமைக்கும் முறை.

1. I have informed - நான் தகவல் தெரிவித்திருக்கிறேன்.

2. I have helped - நான் உதவி செய்திருக்கிறேன்.

3. She has cooked - அவள் சமைத்திருக்கிறாள்.

4. It has rusted - அது துருபிடித்திருக்கிறது.

5. They have discussed - அவர்கள் விவாதித்திருக்கின்றனர்.

6. I have bought a car - நான் ஒரு கார் வாங்கியிருக்கிறேன்.

7. She has paid the fees - அவள் பணம் கட்டியிருக்கிறாள்.

8. We have built a hotel - நாங்கள் ஒரு ஓட்டல் கட்டியிருக்கிறோம்.

உங்களுக்கு ஏற்கனவே தெரியும்.

I, we, you, theyவந்தால், Have use பண்ணனும். He, she, it வந்தால், Has use பண்ணனும்.

அவள் பணம் கட்டியிருக்கிறாள்... இந்த வாக்கியத்தில் எப்போது பணம் கட்டினாள் என்பது தெரியாது. சரியான நேரத்தை குறிப்பிடாமல், செயலை மட்டும் குறிப்பிடும் வாக்கியங்களை, Present perfectல் பயன்படுத்த வேண்டும். சரியான நேரத்தை குறிப்பிட விரும்புவோர், Simple pastயை பயன்படுத்த வேண்டும். புரியலியா? She paid the fees two hours before. இப்படிச் சொல்லணும் சரியா?

இன்னொரு உதாரணம்.

1. நான் நேற்று ஒரு டிரஸ் வாங்கினேன் - I bought a dress yesterday.

2. நான் சற்று நேரத்திற்கு முன்தான் ஒரு டிரஸ் வாங்கினேன் - I have bought a dress.

இதில் முதல் வாக்கியம் கடந்த காலச் செயல், இது நேரத்தை சரியாக குறிக்கிறது. எனவே, இது, Simple past ஆகும்.

இரண்டாவது வாக்கியத்தில் சற்று முன் தான் நடந்துள்ளது. எனவே, இது, Present perfect ஆகும்.

இதுபோதும் என்று நினைக்கிறேன். நன்றாகப் படித்து மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள்.

ஞாபகம் வச்சிக்கோங்க!

Present perfectல் நேரத்தை துல்லியமாக குறிப்பிடமாட்டோம்தானே... ஸோ, என்ன மாதிரி வார்த்தைகளை ,'use' பண்ண வேண்டும் என கீழே கொடுத்துள்ளேன். இதை நல்லா படிச்சி மனதில் ஏற்றிக் கொள்ளவும்.

This moring - இன்று காலை,

This afternoon - இன்று மதியம்,

This evening - இன்று மாலை,

Till now - இதுவரை,

Yet - இன்னும்,

Already - ஏற்கனவே,

Just - இப்போது தான்,

So far - இதுவரை,

Never - ஒருபோதுமில்லை,

For - ஒரு குறிப்பிட்ட நேரத்தில்,

Ever - எப்போதும்,

10 Years ago, 5 days ago.

Last week, last year.

போதுமா? மீண்டும் அடுத்த வாரம் சந்திக்கலாமா?

பை... பை... வர்ஷிதா மிஸ்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us