sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (5)

/

ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (5)

ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (5)

ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (5)


PUBLISHED ON : ஏப் 29, 2016

Google News

PUBLISHED ON : ஏப் 29, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹாய்... ஹாய்... மாணவ, மணிகளே... எத்தனை ஆர்வமாய் இங்கிலீஷ் கத்துக்கறீங்க தெரியுமா? உங்களை விட பெரியவர்களும், ஆர்வமாய் பாடம் கற்றுக் கொள்வதில் எனக்கு ரொம்ப, 'ஹேப்பி'யா இருக்கு தெரியுமா?

அதிலும், 'ஸ்டூடண்ட்ஸ் க்ரவுன்'னில் வந்து அசத்திய, காயத்ரியின் தாத்தா தளவாய் நாராயணசாமி அவர்கள் கடிதம் எழுதியிருந்தார்.... 'வர்ஷி மிஸ் நானும் என் பேத்திகளுடன் சேர்ந்து, 'இங்கிலீசு பேசலாம் வாரியால...' பகுதியை படித்து வருகிறேன். 65 ஆண்டுகளுக்கு முன், Material Noun, Abstract Noun என்பதற்கான காரணம் என்ன என்பதை அறியாமலேயே மதிப்பெண்களுக்காக மட்டுமே படித்து வந்தேன். ஆனால், இன்று தான் இதன் உண்மையான அர்த்தம் புரிந்தது' என்றார்.

தேங்க்யு... சார்....

இப்படி ஏகப்பட்ட கடிதங்கள். ஒரு வாசகி, 'ஐம்பது வருடங்களுக்கு முன்னால் எனது இங்கிலீஷ் டீச்சர் சொல்லித் தந்தது போலவே இருக்கு!' என்று எழுதியிருந்தார்.

ஸோ, உங்களது ஆர்வத்தை பார்த்தவுடன் எனக்கே ரொம்ப, 'குஷி' தாங்கல...

குட்டீஸ்... பெரியவர்கள், நடுத்தர வயதினர் என எல்லாருமே ஆர்வமாக ஆங்கிலம் கற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டபடியால், உங்களுக்கு ஒரு, 'டெஸ்ட்' வைக்கப்போறேன். ஏப்ரலில் ஆரம்பித்தோம் இல்லையா? ஜூன் மாத, ஆரம்பத்தில் ஒரு, 'டெஸ்ட்' வைத்து உங்களுக்கு பரிசு கொடுக்க ஆசைப்படுகிறேன். அதுபற்றிய விவரங்களை பின்னர் அறிவிக்கிறேன்.

எனவே, பாடங்களை கவனமாக படிங்க. அடிக்கடி படித்து மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை உங்களுக்கு, 'டெஸ்ட்' வைப்பேன். அதில் பாஸாகி விட்டால்... கட்டாயம் பரிசு உண்டு. சரியா? எனவே, ஆர்வம் குறையாமல் படிங்க.

'ஸ்போக்கன் இங்கிலீஷ்' என்றவுடனே எல்லாருக்குமே எப்படா இங்கிலீஷை கத்துக்கிட்டு பேசுவோம் என்று இருக்கும். ஆனால், அதற்கு முன்பாக இருக்கிற இலக்கணத்தை படிக்க ஆரம்பித்தவுடனே தலைசுத்த ஆரம்பிச்சிடும். அப்போ... இது என்னடா இவ்ளோ கஷ்டமா இருக்கு...

இதை எப்போ கத்துகிட்டு நாம பேச ஆரம்பிப்பது என்று நினைத்து சோர்ந்து போய் இங்கிலீஷ் பேசுவதையே விட்டு விடுவாங்க. அதனால்தான், இப்பவே நீங்க பேசிப்பழக ஏழு சின்னச் சின்ன வார்த்தைகள் கொடுக்கிறேன்.

இதை நன்கு படித்து மனதில் பதிய வைத்துக் கொள்வதுடன், கிடைக்கும் சந்தர்ப்பங்களில் உங்கள் வீட்டில் உள்ளவர்களுடன் பேசிப் பேசி பழகுங்கள். அப்போதுதான் வெட்கம் உங்களை விட்டுப் போகும். நீங்களும் இப்பவே இங்கிலீஷ் பேசலாம். சரியா

இது பற்றிய உங்கள் கருத்துக்களை எனக்கு எழுதி அனுப்புங்கள்.

பேசிப் பழக குட்டி வாக்கியங்கள்!

When did you come? - எப்போது வந்தாய்?

Is the boss in? - ஐயா உள்ளே இருக்கிறாரா?

Are you coming? - நீ வருகிறாயா?

May i accompany you? - நானும் உடன் வரட்டுமா?

Do you live in Hyderabad - நீ ஹைதராபாத்தில் வசிக்கிறாயா?

No, I live in Mumbai - இல்லை நான் மும்பையில் வசிக்கிறேன்.

Does Babu come to your house? - பாபு உன் வீட்டிற்கு வருகிறானா?

அன்புடன், வர்ஷிதா மிஸ்.






      Dinamalar
      Follow us