PUBLISHED ON : மார் 10, 2017

ஹாய் குட்மார்னிங் எவ்ரிபடி...
'வர்ஷி மிஸ்... Active voice, Passive voiceனாலே எனக்கு பிடிக்காது. ஆனா, அது எப்படி, எங்கே, Use பண்ணணும் என்று, நீங்கள் சொல்லி தந்த விதம், ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு... ஆர்வமா Practice பண்ணிட்டு வர்றோம்!' என்று அநேகர் எழுதியிருந்தீர்கள்... மிக்க நன்றி!
Transformation of sentence பார்த்துட்டு வர்றோம் இல்லையா... இதில் கட்டளை, வேண்டுகோள் வாக்கியங்களை, எப்படி கேள்வி வாக்கியங்களாக மாற்றுவது என பார்ப்போம்.
Imperative Sentence - வேண்டுகோள் வாக்கியம்
Please sit down.
தயவு செய்து உட்கார்.
Interrogative - கேள்வி வாக்கியம்
Will you please sit down? தயவு செய்து நீங்கள் உட்காருறீங்களா?
Imperative Sentence - கட்டளை வாக்கியம்
Stop talking. பேசுவதை நிறுத்து.
Interrogative - கேள்வி வாக்கியம்
Will you please stop talking?
தயவு செய்து பேசாமல் இருக்கிறீர்களா?
Imperative Sentence - கட்டளை வாக்கியம்
Do your work.
உன் வேலையை செய்.
Imperative Sentence - வேண்டுகோள் வாக்கியம்
Will you please do your work?
தயவு செய்து நீ உன் வேலையை பார்க்கிறாயா?
இப்படித்தான் மாற்ற வேண்டும். இதே போல் நிறைய வாக்கியங்களை எழுதி Practice செய்யுங்கள். அப்போதுதான் இது உங்கள் மனதில் பதியும். இதே போன்று, Positive வாக்கியங்களை, எப்படி Comparative, Superlative Sentenceஆக மாற்றுவது என பார்ப்போமா?
1. Sweety is as tall as rani - Positive
சுவீட்டி, ராணி எவ்வளவு உயரமோ, அவ்வளவு உயரமாக இருக்கிறாள்.
Sweety is not taller than rani
- Comparative
ஸ்வீட்டி, ராணியை விட உயரமானவள் அல்ல.
2. No other man was as strong as balan - Positive
பாலனை போல் வலிமையுடையவன் வேறு யாருமில்லை.
Balan was stronger than any other man - Comparative
பாலன் மற்றவர்களை விட மிகவும் வலிமை வாய்ந்தவன்.
3. No other student in the class is as good as her - Positive
அவளை விட சிறந்த மாணவி இந்த வகுப்பில் வேறு ஒருவரும் இல்லை.
She is the best student in the class - Superlative
அவள் வகுப்பிலேயே மிகச் சிறந்த மாணவி.
4. Very few indian prime minister were as popular as jawaharlal nehru. - Positive
ஜவஹர்லால் நேருவை போல் புகழ் பெற்ற பிரதமர் இந்தியாவில் மிகச் சிலரே.
Jawaharlal nehru was one of the most popular prime minister in india - Superlative
ஜவஹர்லால் நேரு இந்தியாவில் புகழ் பெற்ற பிரதமர்களில் ஒருவராக திகழ்ந்தார். இதே போல் வாக்கியங்களை எழுதி எழுதி பழகுங்கள். அடுத்த வாரம் சந்திப்போம்.
பை... பை...
வர்ஷிதா.
