PUBLISHED ON : ஏப் 21, 2017

குட் மார்னிங் எவ்ரிபடி...
உங்களது ஆங்கில ஆர்வம் என்னை வியக்க வைக்கிறது. பள்ளி மாணவர்கள், குடும்பத் தலைவன், தலைவி, ரிட்டயர்ட் ஆசிரியர்கள், வயதில் பெரியவர்கள் கூட விரும்பி ஆங்கிலம் கற்பதும், பாராட்டி பதில் எழுதுவதும், இந்த தொடரை முடிக்க விடாமல் செய்கிறது. தேங்க்யு ஸோ மச்!
இன்றைக்கு, ஒரு சில வாக்கியங்களை சொல்லித் தர்றேன். பேசிப் பழகுங்க...
1. Button your shirt.
உன்னுடைய சட்டைக்கு பட்டன்களை போடு.
2.Try this shirt.
இந்த சட்டையை போட்டுப் பார்.
3. Swallow the tablets.
மாத்திரைகளை விழுங்கு.
4. Why are you wearing torn shirt?
நீ ஏன் கிழிந்த சட்டையை அணிந்து கொண்டிருக்கிறாய்?
5. Hold your tongue!
உன் நாவை அடக்கு!
6.Who is chuckling there?
யார் அங்கே சத்தமின்றி சிரிப்பது?
7. Are you mad?
நீ என்ன பைத்தியமா?
8. Don't bang the door!
கதவை தட்டாதே!
9. Don't try to reform me.
என்னை மாற்ற முயற்சிக்காதே.
10. Stay cool.
அமைதியாயிரு.
11. Keep this with you.
இதை உன்னுடன் வைத்துக் கொள்.
12. He gets angry with me.
அவன் என் மேல் கோபமாக இருக்கிறான்.
13. Its a coincidence.
இது ஒரு ஒத்து நடந்த நிகழ்ச்சி.
14. I deserve this.
நான் இதற்கு தகுதியுள்ளவன்.
15. Go one by one.
ஒவ்வொருவராக செல்லுங்கள்.
16. Teacher asked about you.
ஆசிரியர் உன்னைப் பற்றி கேட்டார்.
17. Getting tensed is of no use.
கோபப்படுவதால் பயன் ஒன்றும் இல்லை.
18. You have to keep your word.
உன் வார்த்தையை காப்பாற்ற வேண்டும்.
19. Did you cast the vote?
நீ ஓட்டு போட்டாயா?
20. What do you want to say?
நீ என்ன சொல்ல விரும்புகிறாய்?
21. Don't utter nonsense.
உன் அறிவின்மையை வெளிப்படுத்தாதே.
22. Who cradled you?
உன்னை யார் சிறுவயதில் வளர்த்தனர்?
23. Who is clapping there?
யார் அங்கே கை தட்டுகின்றனர்?
24. Don't hide the fact from me?
என்னிடம் உண்மையை மறைக்க முயலாதே?
25. Is it worth buying?
இதை வாங்குவதால் பலனுண்டா?
26. He lacks courtesy.
அவன் மரியாதை தெரியாதவன்.
27. Why do you respond rudely?
நீ ஏன் மரியாதை இல்லாமல் பதிலளிக்கிறாய்?
28. He is a coward.
அவன் ஒரு கோழை.
29. He is an extravagant.
அவன் ஒரு ஊதாரி.
30. I meet him occasionally.
அவரை நான் எப்போதாவது சந்திப்பேன்.
இவற்றை நன்றாக படித்து, பேசி பழகுங்கள். சரியா... மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்!
பை... பை...
வர்ஷிதா மிஸ்!
