sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயலா

/

ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயலா

ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயலா

ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயலா


PUBLISHED ON : ஜூன் 03, 2016

Google News

PUBLISHED ON : ஜூன் 03, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹலோ... ஸ்டூடண்ட்ஸ்... இதுவரை நன்றாக படித்துக்கொண்டு வர்றீங்க... வெரி குட்! கிராமத்தில் வசிக்கும் முருகேஸ்வரி சகோதரியும் ஆங்கிலம் கத்துக்கறாங்க. ரொம்ப சந்தோஷம். போன வாரத்தில் I, you, we, they வந்தால் Am, Are வரும் என பார்த்தோம் இல்லையா... இது நிகழ்காலத்தில் நடந்தால் மட்டுமே இப்படி வரும் சரியா?

சரி... அப்போ... இறந்த காலத்தில் I,you, we, theyயுடன் were வரும். புரியலியா? You are என்பது இறந்த காலத்தில் you were, we were என்று மாறும்.

எதிர்காலத்தில் I, we, you, they, he, she, it இவற்றுடன் will be என்பதை இணைக்க வேண்டும்.

1. I will be,

2. We will be,

3. She will be,

4. It will be,

5 They will be,

இதை இப்படி சுலபமாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்!

Present tense வந்தால் am, is, are வரும்

Past tense வந்தால் was, were வரும்

Future tense வந்தால் will be, shall be வரும்

Will - என்பதை எதிர்காலத்தில் நிச்சயமாக செய்யும் செயலைக் குறிக்க பயன்படுத்த வேண்டும்.

I will be - நான் செய்வேன்.

Shall - என்பதை ஒரு செயலைச் செய்யலாம். செய்யாமலும் இருக்கலாம். செய்வது நிச்சயமில்லை என்பதைக் குறிக்கும்.

I Shall be - நான் செய்தாலும் செய்வேன்.

புரிஞ்சுதா குட்டீஸ்?

உதாரணமாக

I am - நான் இருக்கிறேன்.

I was - நான் இருந்தேன்.

I will be - நான் இருப்பேன்.

He is - அவன் இருக்கிறான்.

He was - அவன் இருந்தான்.

He will be - அவன் இருப்பான்.

Sunita is - சுனிதா இருக்கிறாள்.

Sunita was - சுனிதா இருந்தாள்.

Sunita will be - சுனிதா இருப்பாள்.

சரி... அப்படியே ஆங்கில வாக்கியங்களை அமைப்பது எப்படி என்று கத்துக்கோங்க... சரியா. எந்த ஒரு ஆங்கில வாக்கியம் அமைவதாக இருந்தாலும் இந்த மூன்று விதங்களில்தான் அமையும்.

1.Subject + Mainverb + Object

2.Subject + Mainverb + Adverb

3.Subject + Mainverb + Complement

இதைச் சுலபமா இப்படிச் சொல்லலாமா?

S + M.v + O இவற்றை நன்றாக மனதில் உருஏற்றிக் கொள்ளுங்கள்!

S + M.v + A.v

S + M.v + C

Subject தெரியும், Main verb, Adverb, be verbs தெரியும்... அது என்ன Object, Complement, இவை இரண்டும் புதுசா இருக்கேன்னு யோசிக்கிறீங்களா... உங்களது திருட்டு முழியை பார்த்தே கண்டுபிடிச்சிட்டேன்.

ஒரு வாக்கியத்தை அமைக்க தமிழில் எழுவாய், பயனிலை, செயப்படு பொருள் என உங்க தமிழம்மா சொல்லித் தந்தாங்களா... அதைத்தான் இங்கே Subject, Main verb, Object என்கிறோம். சரியா?

ஒரு வாக்கிய அமைப்பு என்பது முறைப்படி முதலில் Subject இடம் பெற வேண்டும். அதாவது Noun அல்லது Pronoun இடம் பெற வேண்டும். அடுத்ததாக Verb வினைச்சொல் இடம் பெற வேண்டும்.

இதில் Object என்பது என்ன தெரியுமா?

Ravi played foot ball. இதில், 'ரவி' என்ன செய்தான்? என்று கேள்வி கேட்டு பாருங்கள். ரவி புட்பால் விளையாடினான் என்ற பதில் கிடைக்கிறது அல்லவா? இவ்வாறு (foot ball) பதில் கிடைப்பதையே, Object என்கிறோம்.

Reventh Married Sushmita

S M.V O

ரேவன்த் யாரை மணந்தான்? சுஷ்மிதாவை மணந்தான் என்ற பதில் வருகிறதல்லவா? எனவே இதுதான், Object.

அதுபோல, 'ஒரு வாக்கியத்தை முடிக்கும் சொல்' Complement என்கிறோம்.

'வர்ஷி மிஸ்... ரொம்ப தலை சுத்துது...'

'சரி... சரி... இத்துடன் முடிக்கப்போறேன் புஜ்ஜீஸ்...

Veena is ______

இந்த வாக்கியத்திலிருந்து ஏதாவது தெரிந்து கொள்ள முடியுதா? இப்படி மொட்டையா இருக்கும் வாக்கியங்களை முடிவு பெறச் செய்பவைதான் Complement என்பது.

veena is Reading

veena is Writing

veena is Singing

இப்போது ஒரு வாக்கியம் முடிவடைந்து விட்டது தானே... ஒ.கே! இன்றைக்கு பாடமும் ஓவர்! கொஞ்சம், 'ரெஸ்ட்' எடுங்க!

பேசிப் பழக குட்டி வாக்கியங்கள்!

1. Make my apologies - எனக்காக மன்னிப்புக் கேளுங்கள்!

2. Don't apologies. It does not matter - அதில் ஒன்றுமில்லை! மன்னிப்பு கேட்க வேண்டாம்.

3. Go to hell - எக்கேடேனும் கெட்டுப்போ!

4. Why are you losing temper? - ஏன் கோபம் கொள்கிறீர்கள்?

5. Come what may!- வருவது வரட்டும்.

6. Don't be excited - பதட்டமடையாதே!

7. Don't Stretch - பேச்சை வளர்க்காதே!

பை! பை! வர்ஷிதா மிஸ்!






      Dinamalar
      Follow us