
கஸ்கஸ்கள் என்ற பிராணி ஆஸ்திரேலியா, நியூகினியா அதை அடுத்துள்ள தீவுகளில் மட்டுமே காணப் படுகிறது. கஸ்கஸ் இனத்தில் பலவகை இருக்கின்றன. எல்லாமே மிக மெதுவாகவும், இலகுவாகவும் செயல்படும் பிராணிகள். இவ்வகையில் மிகப் பெரியது ஒரு பெரிய பூனையைப் போலிருக்கும். கஸ்கஸ்கள் மரங்களில் வாழும் பிராணி. தன் வாலினால் மரக்கிளைகளைப் பற்றிக் கொள்ளும் பழக்கமுடையவை.
நியூகினியா, க்வீன்ஸ்லாந்து, நியூ பிரிட்டன், அட்மிரால்டி தீவுகளில் வாழும் கஸ்கஸ்களின் உடலின் புள்ளிகளும் கோடுகளுமாகக் கோலம் போட்டது போலிருக்கும்; இவை பெரியவையும் கூட. ஆண் இனத்துக்கும், பெண் இனத்துக்கும் மாறுபட்ட உடல் வர்ணமுடைய மம்மல்களை வெகு சிலவே. அவற்றில் இந்த கஸ்கஸ் பிராணியும் ஒன்று. இங்கு நீங்கள் காண்பது அவ்வகையில் ஆண் இனம்.
இதே போல, கஸ்கஸ் களின் கோலமிட்ட உடல், ஆண் இனம் நிறத்திலும், பிராந்தியத்துக்குப் பிராந்தியம் வேறுபடுகிறது. க்வீன்ஸ்லாந்திலும், ஆஸ்திரேலியாவிலும் வாழும் கஸ்கஸ்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். ஆண் கஸ்கஸ்களின் வெள்ளை உடலில் சாம்பல் நிறப் புள்ளிகளும். கோடுகளுமிருக்கும். பெண் கஸ்கஸ்களின் உடலின் மேல் பாகம் வெறும் சாம்பல் நிறமாகவும், கீழ்ப்பாகம் வெள்ளையாகவும் இருக்கும்.
கஸ்கஸ்களின் மென் மயிர் ரோமம் (பர்) ரொம்ப அடர்த்தியானது. இவற்றின் சிறு காதுகள் அதில் புதைந்திருக்கும். இதன் மென்மயிர்ரோமம் வாலின் ஒரு பகுதி வரைதான் இருக்கும். மீதி-பகுதி ரோமமற்றுக் காணப் படுகிறது. இந்த ரோமமில்லாத பகுதி வாலினால்தான் இது மரத்தின் மீது ஏறும் போது, மரக்கிளைகளைப் பற்றிக் கொள்ளும். பழங்கள், சிறுபிராணிகள், பறவைகளின் முட்டைகள், பெரிய நத்தை கள் ஆகியவையே இதன் உணவு.
இரவில் உணவு வேட்டை. பகலில் மரங்களின் அடர்ந்த கிளைகளிலோ பொந்துகளிலோ தூங்கும். இது 'மார்ஸுபியல்' பிராணி. அதாவது வயிற்றில் குட்டி களைச் சுமக்கும் பையுடையது. ஒரு தடவைக்கு ஒன்று அல்லது இரண்டு குட்டிகளைப் போடும்.

