தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சீ... சீ... வெட்கமா இருக்கு!

சீ... சீ... வெட்கமா இருக்கு!

சீ... சீ... வெட்கமா இருக்கு!


PUBLISHED ON : செப் 12, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 12, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நீண்ட அலகு கொண்ட சாதாரணப் பறவையான 'ஸ்நைப்' ரொம்பவும் வெட்கப் படும் பறவை. ஈரம் மற்றும் சதுப்பு நில மைதானங்களில் நிறைந்து இருக்கும். தாவரங்களின் மறைவில் இப்பறவைகள் வாழும். ஐரோப்பா, வட கொரியா, அமெரிக்கா, தென் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா ஆகிய இடங்களில் இவை காணப்படும். வெட்கப்படும் இப்பறவையை தாவரங்களினிடையே அடையாளம் காண்பது மிகக்கடினம். ஒளிந்து கொள்ளும்.

பழுப்பு இறகுகள், கருப்பு மற்றும் வெள்ளை நிற மெத்தென தடித்த தோல்... இவைகள் மற்ற உயிர் களிடமிருந்து மறைக்க உதவு கின்றன. மண்புழு மற்றும் முதுகெலும்பில்லாத சதுப்பு நிலத்தில் கிடைக்கும் உயிர்களை உண்ணும். வெட்கப்படும் குணமிருந்தாலும் வசந்த காலத்தில் 'ஸ்நைப்' வெட்ட வெளிக்கு வரும். வசந்தத்தின் போது இது அதி அற்புத கண்கவரும் காட்சியை செய்து காட்டும்.

மிக உயரத்தில் விண்ணை நோக்கி வட்டமடித்த பிறகு, மிக அதிக வேகத்தில் 40-45 டிகிரி கோணத்தில் பூமியை நோக்கி தரையிறங்கும். அப்படி இறங்குகையில் மிகக் கூரிய ஒலி எனப்படும் 'டிரம்மிங்' ஒலியை எழுப்பும். அவ்வொலி எவ்வளவு பெரியதாக இருக்கும் என்றால் அது ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்கும். இந்த சாகசம் சிறிது நேரம் தான் நீடிக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us