PUBLISHED ON : நவ 20, 2015

ஜகதீஸ் சந்திர போஸ் தாவரங்களுக்கு உயிர் இருக்கிறது; உணர்ச்சி உண்டு. என்ற தனது கண்டுபிடிப்பை 1907ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற அரசு விஞ்ஞான அவையில் உரையாற்றும் போது தெரிவித்தார். ஆனால், அதை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. சற்றும் மனம் தளராத அவர் மீண்டும் இந்தியா வந்து தனது கூற்றை சரிபார்க்கும் ஆராய்ச்சிகளையே தொடர்ந்தார். இதற்காக நுட்பமான கருவிகளை உருவாக்கினார். மீண்டும் தனது கண்டுபிடிப்பை விளக்கிட லண்டன் சென்றார். அதை இப்போது விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டனர். அவர் நோபல் பரிசினைப் பெற இவ்வெற்றி காரணமானது.
உண்மையான வெற்றியை உலகம் வெகு நாட்கள் மறைக்க இயலாது. சாதனையாளர்கள் தங்கள் மீதுள்ள நம்பிக்கையால் தொடர்ந்து போராடி தங்களின் கருத்துக்களின் உண்மையை எடுத்தியம்பி அதில் வெற்றியும் பெறுகின்றனர். அவசரப்படுபவர்கள் பாதியிலேயே திரும்பி விடுகின்றனர்.
