sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

சந்திரசேனன்!

/

சந்திரசேனன்!

சந்திரசேனன்!

சந்திரசேனன்!


PUBLISHED ON : ஜூன் 24, 2016

Google News

PUBLISHED ON : ஜூன் 24, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்னொரு காலத்தில் பூஞ்சோலை என்னும் நாட்டை தூமகேது என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருக்கு மேனகா என்ற மனைவியும், வீரசேனன், சுந்தரசேனன், சந்திரசேனன் என்ற மூன்று மகன்களும் இருந்தனர். மூவரும் திருமண வயதை அடைந்தவர்கள்; வில் வித்தையில் சிறந்தவர்கள்.

மூன்று மகன்களையும் அழைத்து, ''இளவரசர்களே! உங்கள் மூவருக்கும் வித்தியாசமான முறையில் திருமணம் செய்ய உள்ளேன்.

''இந்நகரின் மைதானத்தில் நின்றபடி ஒவ்வொருவரும் அம்பு விடவேண்டும். அது எங்கு சென்று விழுகிறதோ, அந்த இடத்தில் இருக்கும் பெண்ணையே நீங்கள் திருமணம் புரிய வேண்டும்!'' என்றார்.

மூன்று இளவரசர்களும் இத்திட்டத்திற்கு ஒத்துக் கொண்டனர். ஆனால், மகாராணி மேனகாவிற்கு மட்டும் இத்திட்டம் பிடிக்கவில்லை. காரணம், தன் நாட்டிற்கு வரும் மருமகள்கள் நல்ல அழகும், திறமையும், அன்பும் கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணினாள். இதை அரசரிடம் தெரிவித்தாள்.

''மேனகா! நீ ஒன்றும் கவலைப்பட வேண்டாம். இளவரசர்களின் அதிர்ஷ்டத்திற்கு ஏற்பவே, அவர்களின் மனைவி அமைவர். இதில் அவர்களின் நலனும் அடங்கும்,'' என்று சொல்லி மேனகாவைச் சமாதானம் செய்தார் அரசர்.

அன்று பூஞ்சோலை நகர் விழாக்கோலம் பூண்டிருந்தது. அந்நகரின் மக்கள் மிகுந்த ஆரவாரம் கொண்டிருந்தனர். காரணம், அன்று அந்நாட்டு இளவரசர்கள் தங்கள் மனைவியைத் தேர்ந்தெடுக்கும் நன்னாள்.

விழா தொடங்கியது. மூத்த இளவரசன் வீரசேனன் கூடியிருந்தோரை வணங்கிவிட்டு அம்பெய்தான். அது ஒரு விவசாயியின் இல்லத்தின் முன் சென்று விழுந்தது. அவன் ஓரளவுக்கு வசதி படைத்தவனாக விளங்கினான். அவனுக்கு கல்யாணி என்ற அழகு மகள் இருந்தாள்.

அதனால், அவர்களின் திருமணம் உடனே நிச்சயிக்கப்பட்டது. இரண்டாம் இளவரசன் சுந்தரசேனன் அனைவரையும் வணங்கி அம்பெய்தான். அது ஒரு வணிகரின் வீட்டின் முன் விழுந்தது. வணிகரின் மகள் ஊர்வசி நல்ல அழகுடையவளாகவே இருந்தாள். அவள் இரண்டாம் இளவரசனின் மனைவியாகும் தகுதியைப் பெற்றாள்.

இறுதியாக மூன்றாம் இளவரசன் சந்திரசேனன் முன் வந்தான் அம்புவிடுக்க. அவனும் மக்களை வணங்கி அம்புவிடுத்தான். ஆனால், அது எங்கு சென்றது என்று எவராலும் கண்டறிய இயலவில்லை. வீரர்கள் நாலாபுறமும் தேடினர். பலனில்லாததால், சந்திரசேனனையே சென்று தேடுமாறு அரசன் கூறினான். அவனும் சென்றான்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, ஒரு வினோதமான ஒலி கேட்டது. திரும்பிப் பார்க்கையில் ஒரு பூனையின் மேல் அம்பு குத்தியிருந்தது. விரைந்து சென்று அதை நீக்கினான் இளவரசன். அப்போது ஓர் உண்மையை அவன் உணர்ந்தான். தான் எய்த அம்பே அது என்று அறிந்தான். பின்னர் அரண்மனை திரும்பி நிகழ்ந்தவற்றை தன் தந்தையிடம் கூறினான்.

அரசனோ, மற்றொரு வாய்ப்பு வழங்க இயலாதென்றும் அப்பெண் பூனையுடனே அவன் திருமணம் நடக்கும் என்றும் அறிவித்தான்.

இதனால் மனம் நொந்தான் சந்திரசேனன்.

ஒரு நன்னாளில் அவர்களின் திருமணம் நடந்தேறியது. சகோதரர்கள் இருவரும், ''எங்கள் மனைவியே உயர்ந்தவள்! பூனையுடன் எவ்வாறு வாழ்வாய்?'' என்று கேலி செய்தனர்.

இதைக் கேட்ட இளவரசன் சந்திரசேனன் வருத்தமுற்று, தந்தையிடம் சென்று, ''தந்தையே! ஏன் இவ்வாறு செய்தீர்கள்?'' என்று கேட்டான்.

''மகனே! உன் விதிப்படி நீ பூனையோடு தான் வாழ வேண்டும் என்றிருக்கிறது. அதை எவ்வாறு நான் மாற்றுவேன்,'' என்று கேட்டார்.

'விதிப்படி நடக்கும்' என்று தன் வாழ்க்கையில் விளையாடிய தந்தையின் மேல் கோபம் கொண்டு மிகுந்த வேதனையுடன் அறைக்குச் சென்றான்.

பூனையோ, அவன் மெத்தையில் நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தது.

அதைப் பார்த்ததும் ஆத்திரமாய் வந்தது இளவரசனுக்கு. உடனே வேகமாய் சென்று அதனைத் தள்ளிவிட்டான். அப்பூனை திடுக்கிட்டு விழித்துக்கொண்டது. அங்கே, கோபத்துடன் நிற்கும் இளவரசனைப் பார்த்துப் பேசத் தொடங்கியது.

''இளவரசே! என் மீது கோபம் கொள்ளாதீர்கள். உங்கள் தந்தையின் செயலுக்கு நான் எவ்வாறு பொறுப்பாவேன்?'' என்று கேட்டது.

பூனை பேசியதைப் பார்த்தவுடன் அவன் மிகுந்த ஆச்சரியம் கொண்டான். அதைப் புரிந்து கொண்ட அப்பூனை, ''நான் பேசுவதன் காரணத்தை என்னால் இப்போது கூற இயலாது. சமயம் வரும்போது உரைப்பேன். அதுவரையில் என்மீது கோபம் கொள்ளாமல் இருந்தாலே போதும்!'' என்று கூறிவிட்டு சென்றது.

சந்திரசேனன், இரவு முழுவதும் உறக்கம் கொள்ளாமல் தவித்தான்.

'நடப்பது கனவா, நனவா' என்று மிகுந்த குழம்பமடைந்தான்.

மறுநாள், அரசவையில் மூன்று மருமகள்களையும் ஊர்மக்களிடம் அறிமுகம் செய்யும் விழா நடை பெற்றது. முதல் இரு மருமகள்களும் அழகாகத் தங்களை அலங்கரித்து வந்தனர்.

பூனையும், தனக்கேற்ற உடையை அணிந்து ஒய்யாரமாய் நடந்து வந்தது. இதை கண்டோர் ஆச்சரியம் அடைந்தனர். அதன் உடை மிக நேர்த்தியாய் தைக்கப்பட்டு இருந்தது. சபை முன்னர் அரசன் அறிமுகம் செய்யத் தொடங்கினார்.

சந்திரசேனனோ, தம் மனைவியை எவ்வாறு அறிமுகம் செய்வார் என்றெண்ணி வருந்தினான். அரசரும் தம் மூன்றாம் மருமகளை அறிமுகம் செய்யும் தருணம் வந்ததும் கூறத் தொடங்கினார்.

''என் மூன்றாம் மருமகள் வித்தியாசமானவள். தமக்குள் நிறைய திறமைகளை வைத்திருப்பவள். துருதுரு வென்று இயங்கும் தன்மையுடையவள்'' என்று கூறி பூனையை அறிமுகப்படுத்தினார். பிறகு, அனைவரும் அரசரோடு விருந்துண்டனர். சந்திரசேனனோ, தன்னால் விருந்தில் கலந்து கொள்ள இயலாது என்று கூறிச் சென்று விட்டான். காரணம், பூனையோடு உண்ண வேண்டும் என்பதே அது.

பூனையும் இதனை உணர்ந்து அவன் பின்னே சென்று விட்டது. தன் அறையில் சந்திரசேனன் மிகுந்த வருத்தமுற்று அமர்ந்திருந்தான்.

அவன் வருத்தம் தீரவேண்டுமென்றால், தம்முடைய வரலாற்றைக் கூற வேண்டும் என்று தீர்மானித்தது பூனை. ''நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். உங்களுடைய அண்ணிகளை விட நான் மிகவும் உயர்ந்தவள் என்று என்னால் நிரூபிக்க இயலும்!'' என்று கூறியது.

அவன் சந்தேகத்தோடு பார்க்க, பூனை மேலும் கூறத் தொடங்கியது.

'நான் யார் என்பதை என்னால் நேரிடையாகக் கூற இயலாது. தாங்களே அதை முயன்று அறிய வேண்டும். அதற்குத் தாங்கள் ஒருமாதமே அவகாசம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

''அப்படி இயலவில்லையெனில் நீங்கள் ஒரு மானாக உருவெடுத்து விடுவீர்கள். முதலில் தெற்குத் திசையிலிருந்து உங்களுடைய பயணத்தை துவங்க வேண்டும். தங்களுக்கு வழிகாட்ட இந்த நீலக்கல் மோதிரத்தை உபயோகியுங்கள். வழியில் பசி எடுக்காமலிருக்க இந்த லட்டுவை உண்ணுங்கள். பசி, தாகம், தூக்கம் எதுவும் உங்களை அண்டாது.

''இம்முயற்சியில் தோற்றால், உங்கள் தோற்றம் மாறுவதோடு மட்டுமின்றி என் வரலாறும் அழிந்துவிடும். எனக்கேற்பட்ட ஒரு சாபமே என் கதையைக் கூறத் தடுக்கிறது. நீங்கள் அதை அறிந்து கொண்டால் மிகவும் மகிழ்வீர்கள்,'' என்று கூறியது.

இதைக்கேட்ட சந்திரசேனன் சிறிது குழம்பினாலும், பூனையை நம்பித் தன் பயணத்தைத் தொடர்ந்தான். தெற்குத் திசையை நோக்கிச் சென்றான். கையில் இருந்த நீலக்கல் மோதிரத்தைப் பார்த்தான். அது உடனே, அவன் செல்லவேண்டிய வழியைக் காண்பித்தது.

அப்பூனை ஒருவேளை சூனியக்காரியாக இருப்பாளோ என்றெல்லாம் எண்ணிக் கொண்டே சென்றான். வழியில் ஒரு ஓடை இருந்தது. அதில் இருந்த நீரில் தன் உருவத்தைப் பார்த்தான். ஆனால், அதில் ஒரு புறாவின் உருவம் தெரிந்தது. மறுபடியும் தன் உருவத்தைச் சரிபார்த்துக் கொண்டு நீரைக் கண்டான்.

இப்போது ஒரு வாத்தின் உருவம் தெரிந்தது. குழம்பி நின்றான்.

அப்போது அவன் அருகே ஒரு கிழவி வந்தாள்.

-1 தொடரும்...






      Dinamalar
      Follow us