PUBLISHED ON : ஜூன் 24, 2016

என் பெயர் ராஜலஷ்மி கவுரி சங்கர். வயது 73. முப்பது வருடங்களாக தினமலர் வாசகர்கள் நாங்கள். என்னுடைய பிள்ளைகள் படித்த பள்ளியில் ஆங்கிலம், இந்தி இரண்டும் இருந்தது. பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாமல் போய் விடுமே... என்ன செய்வது என்று ரொம்ப கவலைப்பட்டேன்.
அப்போதுதான் சிறுவர்மலர் இதழ் ஆரம்பித்தனர். தமிழ் சொல்லித் தருவதற்காக, என் குழந்தைகளுக்கு சிறுவர்மலர் இதழை அறிமுகம் செய்தேன்.
புதிர் போட்டிகளில் கலந்துகொண்டு, புராணக் கதைகள், படக்கதைகள் மூலம் படிக்க ஆரம்பித்து தமிழை நன்றாக பேச, எழுத கற்றுக் கொண்டனர்.
கதை எழுதுவது, தினமலர் வைக்கும் போட்டிகளில் கலந்து கொள்வது எனக்கு மிகவும் பிடிக்கும். பரிசுகளும் வாங்கியிருக்கிறேன். அருமையான கதைகளை, படிக்கப் படிக்க நாங்களும் குழந்தைகளாகி விடுகிறோம்.
ஒரு காலத்தில் 11 மணிக்கு ஆரம்பித்து இரவு 11 மணி வரை, 'சீரியல்'களைப் பார்த்து அழுதுகொண்டிருந்த நான், புத்தி தெளிந்து போய் அந்தப் பழக்கத்தை விட்டுவிட்டு, தினமலர் நாளிதழ் வெளியிடும் அத்தனை இணைப்புகளையும் படித்து இன்புறுகிறேன்.
ஐ டூ லவ் சிறுவர்மலர்!

