PUBLISHED ON : பிப் 10, 2017

பிராங்கியர்களின் அரசர், முதலாம் சார்லஸ் என்பவரே சார்லமேன் - மகா சார்லஸ் என அழைக்கப்பட்டார். ஐரோப்பாவில் புனிதரோம பேரரசை நிறுவினார். 'சீரிய ஆட்சியாளர்' என மக்களால் நெடுங்காலம் போற்றப்பட்டார்.
தன் மகன்கள், சார்லமேன் மற்றும் கார்லோமேன் இருவருக்கும் தன் அரசாட்சியை விட்டுச் சென்றார். கார்லோமேன் விரைவிலேயே இறந்து போக, சார்லமேன் அதிகாரத்துக்கு வந்தார்.
மிக உயரமான மனிதர்; தலைவிதியை நம்பும் இவர், கொடூரமான வீரர். பிராங்கியர்களின் பூர்வீக இடமான பிரான்சில் இருந்து, தன் படைகளை தற்போதைய நெதர்லாந்து, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய பகுதிகளுக்கு அழைத்து சென்றார்.
சார்லமேனிடம் நிறைய நல்ல அம்சங்கள் இருந்தன. லத்தீனை படிக்க கற்று கொண்ட அவர், அறிவாளிகளை அதிகம் மதித்தார்.
ஆக்கெனில் இருந்த அவரது தலைநகரம் பேரரசின் ஒளி நிறைந்தமையமாக இருந்தது. ஆனால், பேரரசர் எளிமையான ஆடை உடுத்தி, எளிய வாழ்க்கையே வாழ்ந்தார்.
அவருக்கு படித்துக்காட்டுவதற்கு நிறைய புத்தகங்கள் இருந்தன. ஆல்சுயின் ஆப்யார்க் போன்ற புகழ்பெற்ற அறிஞர்களை அரசவைக்கு வரவழைத்தார்.
ஐரோப்பாவின் வலிமையான தலைவராக விளங்கினார். அப்போது தான் போப் இவரை, புனிதரோமின் பேரரசராக முடிசூட்டினார்.
கி.பி., 814ல் இவர் இறந்த பின், புனித ரோமப் பேரரசு, பல தாக்குதல்களால் பலவீனம் அடைந்தது. விரைவிலேயே இவரின் மூன்று ரன்களுக்கிடையேயான போட்டியில் பேரரசு பிளவுண்டது.
எனினும், கி.பி., 1806 வரை ஏதோ ஒரு வடிவத்தில் இந்த பேரரசு இருந்து கொண்டு தான் இருந்தது.
சார்லமேனின் இறப்புக்கு பின், அவரைப் பற்றி நிறைய கதைகள் எழுதப்பட்டன.
புனித ரோமப் பேரரசரின் இரும்பு ஈட்டிகள் அதிகாரத்தின் குறியீடாகவும், அதே சமயம் புனித சின்னமாகவும் விளங்கின. ஈட்டியை சுற்றி தங்க உறை ஒன்று, ஆணி மீது இழுத்து விடப்பட்டிருக்கும். இந்த ஆணி மதிப்புமிக்க கிறிஸ்துவின் சிலுவையில் இருந்து வந்ததாக நம்பப்படுகிறது.
பிராங்கிய பேரரசு ஆட்சி செய்த இடங்கள்
ஆக்கென் என்ற ராஜாங்க் தலைநகரில் இருக்கும் சார்லமேன் கல்லறை, கி.பி.,1215ல் இருந்து இருக்கிறது. இது தங்கம் மற்றும் விலை மதிப்பில்லாத கற்களாலும் அலங்கரிக்கப்ட்டு இருக்கிறது.
