தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சிதம்பரத்தின் உத்தி!

சிதம்பரத்தின் உத்தி!

சிதம்பரத்தின் உத்தி!


PUBLISHED ON : நவ 20, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 20, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கர்நாடகா மாநிலம், பெல்காம் மாவட்டத்தில் வசித்து வந்தார், சிதம்பரம். அவரிடம், குறைகளைக் கூறி, பரிகாரம் தேட வருவர் பலர்.

ஒரு பெண், 'குழந்தை பிறக்க ஆசிர்வதிக்க வேண்டும்...' என்று கேட்டார். குழந்தை வேண்டி கடைபிடித்த விரதங்கள் பற்றியும் கூறினாள்.

ஒரு பிடி நிலக்கடலையை அவளிடம் கொடுத்து, 'அதோ... அந்த கதவின் அருகில் உட்கார்; சிறிது நேரத்தில் அழைக்கிறேன்...' என்றார் சிதம்பரம்.

வீட்டு திண்ணையில் அமர்ந்து, நிலக் கடலையை சாப்பிட ஆரம்பித்தாள் அந்த பெண். சில சிறுவர்கள் அந்த பக்கம் வந்தனர்; அந்த பெண்ணிடம் கையை நீட்டி கடலைக் கேட்டான் ஒரு சிறுவன்.

சிடுசிடுப்புடன், 'ஒருவனுக்கு கொடுத்தால், எல்லாரும் கேட்பர்; அதனால் தர முடியாது; போ...' என விரட்டியடித்தாள்.

இதை கவனித்த சிதம்பரம், அவளை அழைத்து, 'அம்மா... உனக்கு குழந்தை பிறப்பது அரிது...' என்றார். பதற்றத்துடன், 'ஏன் அப்படி கூறுகிறீர்கள்...' என கேட்டாள்.

'நிலக்கடலை கேட்ட, சிறுவனுக்கு கொடுக்க மனம் வரவில்லையே... குழந்தைகள் மீது அன்பில்லாவிட்டால் இறைவன் எப்படி கொடுப்பார்...' என்றார் சிதம்பரம்.

குழந்தைகளே... அன்புடன் வாழ பழகுவோம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us