PUBLISHED ON : நவ 20, 2021

என் வயது, 59; நீண்ட காலமாக தினமலர் நாளிதழ் படிக்கிறேன். சனிக்கிழமை என்றால், சிறுவர்மலர் படித்த பின்தான், மற்ற செய்திகளை புரட்டுவேன்.
சிறுவர்மலர் இதழில் பக்கத்துக்குப் பக்கம், மனித வாழ்வுக்கு தேவையான அம்சங்கள் கொண்ட தகவல்கள் அடங்கியுள்ளன.
சிறுவர்களுக்கு நன்நெறி கதைகள், நீதி கதைகள், திறனறிதல், பள்ளிப் பருவத்தை திரும்பி பார்க்க வைக்கும், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி, குழந்தைகளின் வினோதப் போக்கிற்கு விடை காணும், 'இளஸ்... மனஸ்...' பகுதி என, ஏகப்பட்ட விஷயங்களை உள்ளடக்கியுள்ளது.
இதழ்களில், ஒரு பொக்கிஷமாக வலம் வருகிறது.
நான் பெரிய எழுத்தாளனோ, தமிழ் இலக்கியம் படித்தவனோ அல்ல; ஆனால் சிறுவர்மலர், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதியில், என் அனுபவத்தை கட்டுரையாக எழுதியிருக்கிறேன். என்னை எழுத்தாளனாக்கிய பெருமை சிறுவர்மலர் இதழையேச் சேரும்!
- க.சோணையா, மதுரை.
தொடர்புக்கு: 95436 48506
