தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சர்ச்சிலை பணிய வைத்த காந்தி!

சர்ச்சிலை பணிய வைத்த காந்தி!

சர்ச்சிலை பணிய வைத்த காந்தி!


PUBLISHED ON : ஜன 06, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 06, 2012


Follow on Google
அ நிறம் | அளவு

காந்திஜி சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு, வெள்ளையனே வெளியேறு என்று முழக்கமிட்டார். இந்தியர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மக்கள், காந்தியின் பின்னே அணிவகுத்து நின்றனர்.

இங்கிலாந்து பார்லிமென்ட்டில் இது பற்றிய பேச்சு வந்தது. போராட்டத்தை எந்த வகையில் அடக்கலாம் என்று கருத்துக் கேட்கப்பட்டது. அப்போது சர்ச்சில் எழுந்து கீழ் கண்டவாறு கூறினார். ''இந்த காந்தி, துப்பாக்கி ஏந்தி போரிட்டால், நான் பீரங்கியால் நசுக்கி இருப்பேன். பீரங்கி கொண்டு போராடினால், விமானம் கொண்டு அழித்திருப்பேன். ஆனால் அவரோ, ஆயுதங்களை புறக்கணித்து விட்டு, அகிம்சை, சத்தியம் இவைகளையே ஆயதமாகக் கொண்டு போராடுகிறார். இவற்றை மழுங்கடிக்கக் கூடிய ஆயுதம் உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அவரை வெற்றி கொள்ள முடியவில்லை. பணிந்து போகக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது!'' என்றார்.

சர்ச்சில் இப்படிக் கூறியது, பார்லிமென்ட் உறுப்பினர்களை திகைக்க வைத்தது. சர்ச்சில் இப்படி பேசுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

காந்தி ஒரு மகாத்மா என்பதை மறைமுகமாக அவர் உணர்ந்திருந்தார் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சாட்சி.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us