தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/திப்பிலி!

திப்பிலி!

திப்பிலி!


PUBLISHED ON : ஜன 06, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 06, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆங்கிலத்தில், 'லால் பெப்பர்' என்பர். தமிழில் திப்பிலி எனப்படும். திப்பிலிக்கு சரம், சாடி, சவுண்டி, குடாரி, கோலி, அம்பு, ஆர்கதி, தண்டுலி, துளவி, வைதேகி, மாகதி என்று பல பெயர்களுண்டு. இது கொடிவகை, அரிசிச் திப்பிலி, யானைத் திப்பிலி என இருவகை உள்ளது. அதிக வீரியம் இதற்கு உண்டு. பச்சையாக உள்ள போது இனிக்கும். காய்ந்தபின் காரமாகும். உஷ்ணம் தரும். வாய்வகற்றும், பச்சைத் திப்பிலி பித்தம் நீக்கும். உலர்ந்த திப்பிலி இருமல், குன்மம், ஈளை, பாண்டு, தலைவலி, மயக்கம் ஜலதோஷம் முதலியவற்றை அடக்க நலம் தரும். மலப்பெருக்கைக் குறைக்கும். குளிர் காய்ச்சல், மகோதரம் மேகக்கட்டி, மூலம், தொண்டைப் புண்< காது, மூக்கு, கண்களில் உண்டாகும் நோய்கள், கிருமி நோய் நீங்கும். விந்தைக் கெட்டிப்படுத்தும்.

திப்பிலிச் சூரணத்தை, வெற்றிலை, தேனுடன் கலந்து உண்டால் கோழைநீங்கும். இருமல், காய்ச்சல் தீரும். இதே சூரணத்தைப் பசும்பாலுடன் உண்டால் மயக்கம், வாய்வு, ஜன்னி நீங்கும்; காச நோயும் தீரும்.

அரிசித் திப்பிலியை சூரணமாக்கிச் சீனியுடன் சிறிதளவு ஒருவேளை சாப்பிட்டு வந்தால் வயிற்று உப்புசம், வாதக் காய்ச்சல், காசநோய் எல்லாம் தீரும்; விந்து காக்கப்படும்.

திப்பிலி மூலத்தை கண்டந்திப்பிலி என்பர். அம்பினடி, வேர், மோடி, தேசாவரம், நறுக்குத் திப்பிலி என்றும் பலப்பல பெயர்களுண்டு. வெளுத்த மஞ்சள் நிறமான இது பசியை தூண்டும். இது பித்த உடல் உள்ளவர்களுக்கு உதவாது.

சோகை, தூக்கம், பித்தம், இருமல், மேகம், உடல் வலி, குரல் கம்மல் நீக்கம். துர்நீரை வளரச் செய்யும். உடல் வலி தீர்க்கும். இதைப் பால்விட்டு அரைத்துப் பாலுடன் கொடுத்தால் குறுக்கு வலி, நாவறட்சி, வாதக் குற்றம் எல்லாம் போகும்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us