PUBLISHED ON : ஜூன் 15, 2012

அ நிறம் | அளவு
பொதுவாக 'சேற்றில் முளைத்த செந்தாமரை' என்று தாமரையை சொல்வர். தாமரை சேற்றில் முளைத்தாலும் தன்னைத்தானே அழகாக தூய்மைப் படுத்திக் கொள்ளும் , சரியான சுத்தக்காரி தெரியுமா?
தாமரை இலையில் காணப்படும் கெட்டியான மெழுகுப்பூச்சு, அதன் மீது படியும் பாக்டீரியா, தூசு, அழுக்கு போன்றவற்றை அதில் ஒட்டிகொள்ள விடாமல் செய்கிறது. மழை பெய்யும் போது இலையின் மீது பட்டும்படாமல் இருக்கும் தூசுகளும், நுண்ணுயிரிகளும் தண்ணீரில் அடித்து செல்லப்படுவதால் தாமரை சுத்தமாக உள்ளது. இதனால் இவற்றை உலகநாடுகள் தங்கள் நாட்டின் கலாசார தூய்மையின் அடையாளமாக கருதுகின்றனர் என்றால் பார்த்துக் கோங்களேன்!
