தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கிளைமேட் நம்ம கன்ட்ரோல்!

கிளைமேட் நம்ம கன்ட்ரோல்!

கிளைமேட் நம்ம கன்ட்ரோல்!


PUBLISHED ON : அக் 26, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 26, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குளிரான வானிலை எப்போதுமே நிரம்பி இருக்கும் நாடுகளில், வெப்ப வானிலை எப்போதுமே இருக்கும் நாடுகளில் விளையும் காய்கறிகள் விளைவதில்லை. ஏனெனில், தேவையான உஷ்ணம் கிடைக்கப் பெறுவதில்லை. ஆனால், வானிலை பற்றி கொஞ்சம் கூட கவலைப் படாமல் கண்ணாடி அல்லது தெளிவான பிளாஸ்டிக் சுவர்களால் ஆன இந்த உஷ்ண வீட்டில் ஒரு விவசாயி எந்த தாவரத்தையும் வளர்க்கலாம். ஏனெனில் இந்த வீட்டின் உள்ளே சீதோஷ்ண நிலை கட்டுப்படுத்தப் படுகிறது. அதேபோல, இந்த வகை உஷ்ணவீடு அல்லது 'சீதோஷ்ண வீடு' என்பது உஷ்ண பருவநிலை இருக்கும் நாடுகளிலும் பயன்படும். அதோடு வெயில் கால பயிர்கள், குளிர் கால பயிர்கள் என, எந்த பருவத்தையும் பற்றி கவலைப் படாமல் ஒரு விவசாயி எந்த பயிரையும் பெறலாம்.

இயற்கையின் சீதோஷ்ண வீடு!



உலகின் மிக வெப்பமான பகுதிகள் வறண்ட பாலைவனங்கள்தான். ஆனால், தண்ணீர் தேவை நிறைவு செய்யப்பட்டால் இந்த வறண்ட பாலைவன உஷ்ணத்தை நல்லவற்றிற்கு பயன்படுத்தலாம். ஜோர்டானின் இந்த பழத்தோட்டத்தை போன்ற செறிவான தோட்டங்களை உருவாக்கலாம்.

கம்ப்யூட்டரால் செய்யப்படும் கன்ட்ரோல்!



தக்காளி மிகவும் நூதனமான, மென்மையான தாவரம். இந்த 'சீதோஷ்ணவீடு' இது போன்ற தாவரம் தழைத்து வளர உதவுகிறது. இந்த வீட்டினில் அற்புதமாய் வளரும் தக்காளி உயர் தரத்துடன் இருக்கிறது. கைகளால் தான் பறிக்கப்படுகிறது.

சிறுதுளி பொழிவு!



பெரிய சீதோஷ்ண வீடுகளில் இன்று பெரும்பாலான வேலைகள் இயந்திரங்கள் மூலமே நடைப்பெறுகிறது. இந்த இளசான இனிப்பு, மிளகு, பயிர்கள் மேலே இருக்கும் பைப்புகள் மூலம் நீர் ஊற்றப்பட்டு வளர்கிறது. அதோடு ஈரமான, கதகதப்பான இடங்களில் வசிக்க துடிக்கும் பூச்சிகளை தடுக்கவும் இதுபோல தண்ணீர் தெளிக்கப்படுகிறது.

பச்சை படுக்கை!



விதைகள் இந்த சீதோஷ்ண வீட்டின் கதகதப்பு மற்றும் பாதுகாப்பில் மிக சீக்கிரமே முளைவிட்டு கிளம்பி வளருகிறது. இவை ஒரு வகை கீரையின் சிறுசெடி வளர்ச்சியின் காட்சி. சீதோஷ்ண வீடு என்பது பெரிதாக இருக்கும். சில விதைகள் ஒரு கால்பந்து மைதானத்தில் பாதி கூட இருக்கும்.

தண்ணீர் தோட்டங்கள்!



சில காய்கறிகள் மண்வளம் இன்றி கூட வளர்க்கப்படலாம். இங்கே, தாவரங்களுக்கு தேவையான சத்துக்கள் தண்ணீரில் கலக்கப் பட்டு தாவரம் செறிவூட்டப்படுகிறது. இப்படி வளரும் தாவரங்களை ஹைட்ரோபோனிக்ஸ் என்பர். ரசாயன உணவு கொண்டு நீரில் வளரும் செடிகள் என்று அர்த்தம்.

சீதோஷ்ண மாற்ற பயிர்கள்!



இங்கே சில பயிர்கள் தரப்பட்டுள்ளன. இவை பொதுவாய், அதிக உஷ்ணத்தில் வளரும். ஆனால், சீதோஷ்ண வீட்டின் குளிர்நிலையிலும் வளர்க்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us