தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/காக்டெயில்!

காக்டெயில்!

காக்டெயில்!


PUBLISHED ON : டிச 05, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 05, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு மதுவில் பலவகை வண்ணங்களும், வாசனைகளும் கொண்ட வேறு மதுவகைகளைக் கலக்கும் பழக்கம் பிரான்சில் ஆரம்பித்தது. பிரெஞ்சு மொழியில் அது காகுடெல் என பெயர் பெற்றிருந்தது. சேவலின் வால் என்பது இதன் பொருள். சேவலின் வாலில் பல வண்ண இறகுகள் இருக்கும். ஆங்கிலத்தில் இது (COCKTAIL) என்று அழைக்கப்பட்டது.

ஒரு காலத்தில் இங்கிலாந்தில் 'சேவல் சண்டை' அல்லது கோழிச் சண்டை மிகவும் பிரபலமாக இருந்தது. சண்டை ஆரம்பிப் பதற்கு முன்னால், இப்படிப்பட்ட கலக்கல் மதுபானத்தை சேவல்களுக்கு ஊட்டி விடுவார்கள். அதனால், தன்னை மறந்து வாலை தூக்கிக் கொண்டு சண்டைக்கு வெறி பிடித்தாற் போலத் தயாராகி விடும்.

அதே போல், இந்த வண்ணக் கலவை, 'காக்டெயில்' மதுவைக் குடிக்கும் மனிதர்களும் சேவலைப் போலவே வெறிகொண்டு, எந்தவொரு சாகசத்தைச் செய்யவும் தயாராகிவிடுவர் என்று நம்பப்பட்டு வந்தது. நாளடைவில் 'காக்டெயில்' என்ற பெயரும் நிலைத்து விட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us