தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/என்ன உறவு?

என்ன உறவு?

என்ன உறவு?


PUBLISHED ON : டிச 05, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 05, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அடிமை வழக்கம் இருந்த காலம் அது. ஜான் என்ற அடிமை, தன் முதலாளி மகிழுமாறு உண்மையாக நடந்துக் கொண்டான். அவன் மீது நம்பிக்கை வைத்தார் முதலாளி. என்ன செய்தாலும் அவனைக் கேட்டே செய்தார்.

ஜானை அழைத்த அவர், ''அடிமை ஒருவனை விலைக்கு வாங்க வேண்டும். நீயும் வா,'' என்றார்.

இருவரும் அடிமைச் சந்தைக்கு சென்றனர்.

அங்கே விற்பனைக்கு இருந்த அடிமைகளில் கிழவர் ஒருவரும் இருந்தார். ஜானைப் பார்த்த அந்தக் கிழவர் தலை கவிழ்ந்து கொண்டார்.

அவரைக் காட்டிய ஜான், ''எசமான்! எனக்காக இந்தக் கிழவரை வாங்குங்கள்,'' என்றான்.

அவரும் அந்தக் கிழவரை வாங்கினார்.

''ஜான்! இந்தக் கிழவருக்கு என்ன வேலை தருவது?'' என்று கேட்டார்.

''எசமான்! இவரிடம் நான் வேலை வாங்கிக் கொள்கிறேன்,'' என்றான் ஜான்.

நாட்கள் சென்றன.

''ஜான்! நீ அந்தக் கிழவரிடம் அன்பு காட்டுகிறாய். அவர் செய்ய வேண்டிய வேலைகளை நீயே செய்கிறாய். அவர் உனக்கு என்ன உறவாக வேண்டும்?''

''எந்த உறவும் இல்லை!''

''அப்படியானால் அவர் உன் நண்பனா?''

''நண்பனும் இல்லை!''

''உனக்கு அவர் உறவும் இல்லை. நண்பனும் இல்லை. அப்படியானால் அவர் யார்?'' என்று கேட்டார் அவர்.

''எசமான்! அவர் என் எதிரி. என்னை வஞ்சகமாக அழைத்து வந்து அடிமைச் சந்தையில் விற்றவர்,'' என்றான் ஜான்.

''எதிரியிடமா இப்படி அன்பு காட்டுகிறாய்?'' என்று வியப்புடன் கேட்டார் அவர்.

''நான் சிறுவனாக இருந்த போது ஓய்வுநாள் பள்ளியில் சேர்ந்தேன். 'உன் எதிரி பசித்து இருந்தால் அவனுக்கு உணவிடு, தாகத்துடன் இருந்தால் தண்ணீர் கொடு. நீ அன்பு <உடையவன் என்பதற்கு இதுதான் அடையாளம். தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்வதே நல்ல பண்பு' என்று பாடம் நடத்தினார் ஆசிரியர்.

''அவர் சொன்ன அறிவுரை என் உள்ளத்தில் நன்றாகப் பதிந்தது. அதைத்தான் பின்பற்றி வருகிறேன்,'' என்றான் ஜான்.

உள்ளம் நெகிழ்ந்த அவர் அவனை அணைத்துக் கொண்டார்.

''உன்னைப் போன்ற பண்பாளனை நான் பார்த்தது இல்லை. இனி நீ என் அடிமை இல்லை. என் நண்பன். இந்தக் கிழவரு க்கும் விடுதலை தருகிறேன்,'' என்றார்.

ஜான் முதலாளிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டான்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us