PUBLISHED ON : டிச 16, 2011

உலகின் முதல் சீப்பு ஆப்ரிக்க கண்டங்களில் ஒன்றான நியூகினியாவில் தோன்றியது என்று மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இங்கு வசிக்கும் மக்களின் முடி சுருள் சுருளாக இருக்கும். ஆங்காங்கே வளையல்களை கட்டி தொங்கவிடும் பழக்கம் கொண்டவர்கள். அக்காலத்தில் தலையில் எண்ணெய் தேய்க்கும் பழக்கமும் இருந்தது. எனவே, முடியை ஒழுங்கு படுத்த மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். பிறகு சிறு குச்சியை கொண்டு சுத்தம் செய்தனர்.
பிறகு, மிருகங்களின் எலும்பை கொண்டு சீப்பை தயாரித்தனர். பின்னர், மரம், எருமை மாட்டு கொம்பு முதலியவற்றில் சீப்பு தயாரித்தனர்.
எருமைமாடுகளின் கொம்புகளை போன்ற அமைப்பில்தான் இவர்கள் சீப்பு இருந்தது. சுவிட்சர்லாந்து ஏரி பகுதியில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய கொம்புகள் சீப்பு சுவிட்சர்லாந்து அருங்காட்சியகத்தில் உள்ளது. ஆசியாவிலுள்ள மக்கள்தான் முதன் முதலில் மூங்கில் மற்றும் தென்னை மர பட்டையிலிருந்து சீப்பு தயாரித்தனர். இன்று ஆண்களும், பெண்களும் பயன்படுத்தும் கையடக்க சீப்பு இன்றைய நவீன தயாரிப்பு அல்ல; ரோம பேரரசின் அழிந்து போன இடிபாடுகளுக்கு இடையே இருந்து யானை தந்தத்தினால் செய்யப்பட்ட சீப்புகள் கிடைத்துள்ளது. இது அமெரிக்க நாட்டு அருங்காட்சியகத்தில் இன்றும் உள்ளது.
***
