PUBLISHED ON : டிச 16, 2011

அ நிறம் | அளவு
தபால் தலை மீது முத்திரை குத்துவதால் குறிப்பிட்ட கடிதத்தின் மீது ஒட்டப்பட்டிருக்கும் தபால் தலை பயன்படுத்திவிட்டதாக பொருள். சில தபால்களின் தபால் தலை முழுவதுமாக கறுப்பான வட்டமாக முத்திரை விழுந்திருக்கும். இது தபால் தலை சேகரிப்போருக்கு கவலை அளிக்கும்.
சென்னை போன்ற பெருநகரங்களில் தபால் தலை சேகரிப்போருக்கு உதவியாக, 'பில்லாடலிக் பீரோ' என்ற அமைப்பு உள்ளது. இது புதிய தபால் தலை வெளியிடும் போது அன்றைய தினமே, 'முதல் நாள் உறை' வெளியிடப்படுகிறது. இந்த உறை புதிய தபால் தலை வெளியிடும் நாள் மட்டுமே கிடைக்கும். இதை வாங்குவதற்கு தபால் தலை சேகரிப்போர் தலைமை தபால் அலுவலகத்தில் கூடுகின்றனர்.
***
