தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/டாக்ஸி!

டாக்ஸி!

டாக்ஸி!


PUBLISHED ON : டிச 16, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 16, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டாக்ஸி மீட்டர், 'கேப்' என்பதுதான் டாக்ஸியின் நிஜப்பெயர். டாக்ஸி என்றும் கேப் என்றும் பிரித்து விட்டனர். மோட்டார் வாகனம் கண்டுப்பிடிக்கப்பட்டு பல ஆண்டுகளுக்கு பிறகே, 'வாடகை கார்' பயன்படுத்தும் முறை உலகிற்கு வந்தது. 1888-ம் ஆண்டு முதன் முதலில் லண்டனில் வாடகை டாக்ஸி அறிமுகப்படுத்தப்பட்டது. கட்டணம் குறிப்பிட்ட தூரத்திற்கு இவ்வளவு 'பவுண்ட்' என்று விதிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தில் பயணிக்கும், டிரைவருக்கும் தகராறு ஏற்பட்டது. இப்பிரச்னையை தீர்க்க, ஓடும் போதே தூரத்தை அளக்கும் டாக்ஸி மீட்டரை ஜெர்மனியை சேர்ந்த டபிள்யூ.ஜி.புரூகன் என்பவர் 1891ம் ஆண்டு கண்டுப்பிடித்தார்.

டாக்ஸி மீட்டரை 1898ல் இறக்குமதி செய்து லண்டன் டாக்ஸிகளில் பொருத்தப்பட்டது. லண்டனுக்கு அடுத்து 1898ல் அமெரிக்காவிலும் வாடகைக் கார் அறிமுகப்படுத்தப்பட்டது.

வாடகைக் கார் என்பதை அறிவுறுத்த சிகப்பு கொடியுடன், 'Frei' என்ற சொல்லும் காரில் எழுதினர். Frei என்பது 'For Hire' என்று ஆனது. 1896ல் பாரிஸில் டாக்ஸிகள் அறிமுகப்படுத்தபட்டது. பாரிஸில்தான் டிரைவர்கள் சீருடை அணிய வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. 1897ல் டாக்ஸிகள் மஞ்சள் பெயின்ட் அடிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தியது.

மெக்ஸிகோ நாட்டில் தான் உலகிலேயே அதிக அளவு டாக்ஸி ஓடுகிறது. நம்மூரில் 'ரூட்பஸ்கள்' இயங்குவது போல் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று திரும்புகிறது.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us