தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சுற்றி சுற்றி வந்தீங்க!

சுற்றி சுற்றி வந்தீங்க!

சுற்றி சுற்றி வந்தீங்க!


PUBLISHED ON : ஜூன் 24, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 24, 2011


Follow on Google
அ நிறம் | அளவு

ஒரு ஊரில் சிறிய குடும்பம் ஒன்று இருந்தது. அதில் கணவன், மனைவி, மகள், மகன் ஆகிய நால்வரும் மகிழ்ச்சியுடனும், பாசத்துடனும் வாழ்ந்து வந்தனர். சந்தைக்குப் போன தாய் திராட்சைக்குலை ஒன்றை வாங்கிக் கொண்டு வந்தாள். அதை தன் மகளிடம் கொடுத்தாள்.

அதில் ஒரு பழத்தை எடுத்து வாயில் போட்டுச் சுவைத்ததும், தன் தம்பியின் நினைவு வந்தது. உடனே தம்பியிடம் கொடுத்தாள். அவன் ஒரு பழத்தைச் சாப்பிட்டதும் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தந்தையிடம் ஓடிப்போய்க் கொடுத்தான். அவர் ஒரு பழத்தை எடுத்துச் சாப்பிட்டதும், சமையல் அறையில் இருந்த மனைவியின் நினைவு வந்தது. அவளிடம் ஒரு பழத்தைக் கொண்டு போய் கொடுத்தார்.

அதை மிகழ்ச்சியோடு வாங்கிக் கொண்ட மனைவி, ''இந்தத் திராட்சைக் கொத்து எங்கிருந்து புறப்பட்டதோ அந்த இடத்துக்கே திரும்பி வந்து விட்டது!'' என்று அன்புடன் கூறினாள்.

உண்மையான பாசம் கொண்ட குடும்பம் இப்படித்தான் இருக்கும்... இருக்கணும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us