தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஏன் மதிப்பு தரல?

ஏன் மதிப்பு தரல?

ஏன் மதிப்பு தரல?


PUBLISHED ON : ஜூன் 24, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 24, 2011


Follow on Google
அ நிறம் | அளவு

பல்லவ நாட்டுப் படைத் தலைவர் அவர். பல போர்க்களங்களில் தன் வீரத்தால் நாட்டிற்கு வெற்றி தேடித் தந்தவர். மாவீரரான அவர் பெயரைக் கேட்டால் எதிரிகள் அஞ்சி நடுங்குவர். இதனால் மிகுந்த தற்பெருமை கொண்டிருந்தார் அவர்.

அந்த நாட்டில் காட்டிற்கு நடுவே துறவிகள் மடம் ஒன்று இருந்தது. அங்கே சில நாட்கள் தங்கிப் புத்துணர்ச்சி பெற விரும்பினார் அவர். அந்த மடத்திற்குச் சென்று தங்கினார். அங்குள்ள துறவிகள் தனக்கு உரிய மதிப்பு தரவில்லை என்று கோபம் கொண்டார் அவர்.

தலைமைத் துறவியிடம் சென்ற அவர், ''நான் யார் என்பது உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் என் வீரத்தையும் மதிக்கவில்லை. நான் நாட்டிற்கு ஆற்றிய சேவைகளையும் மதிக்கவில்லை!'' என்று கோபத்துடன் கத்தினார்.

அதற்குத் தலைமைத் துறவி, ''உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்குப் பதில் சொல்வீர்களா?'' என்று அமைதியாகக் கேட்டார்.

''கேளுங்கள். பதில் சொல்கிறேன்!'' என்று கோபம் அடங்காமல் சொன்னார் அவர்.

''உங்களைவிட வீரம் குறைந்தவர்களுக்கு நீங்கள் மதிப்பு தருவீர்களா?''

''மதிப்பு தர மாட்டேன். எதற்காகக் கேட்கிறீர்கள்?''

''உங்கள் நிலையில்தான் நாங்களும் உள்ளோம்!''

இதைக் கேட்டு மேலும் கோபம் கொண்டார் அவர்.

''துறவிகளாகிய நீங்கள் என்னைவிட வீரம் மிகுந்தவர்களா? எத்தனை போர்க்களங்களைப் பார்த்து இருக்கிறீர்கள். எத்தனை எதிரிகளைக் கொன்று இருக்கிறீர்கள்? சொல்லுங்கள்!'' என்று கத்தினார் அவர்.

''பிறரை வெல்வதில் என்ன வீரம் உள்ளது? தன்னையே வெல்வது அல்லவா உண்மையான வீரம். உலகத்தில் பிறரை வென்றவர்கள் எண்ணற்றவர்கள். தன்னை வென்றவர்கள் மிகச் சிலர்தான். உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் உங்களை வென்று விட்டீர்களா?

''உங்களுக்குப் புலனடக்கம் உள்ளதா? நீங்கள் நினை என்றால் உங்கள் உள்ளம் நினைக்கிறதா? உங்களால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடிகிறதா? இங்குள்ள துறவிகளாகிய நாங்கள் உள்ளத்தை வென்றவர்கள். உங்களைவிட நாங்கள் வீரர்களா இல்லையா? சொல்லுங்கள்!'' என்று கேட்டார் துறவி.

தலை கவிழ்ந்து அமைதியானார் தளபதி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us