PUBLISHED ON : அக் 04, 2013

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விவசாயிகளின் நண்பன் என்று இதுவரை மண்புழுவையும், ஆந்தையையும் கூறி வந்தோம். இனி அந்தப்பட்டியலில் வவ்வால் களையும் சேர்த்துக் கொள்ளலாம். அதிலும் பழுப்பு நிற வவ்வால்கள் விவசாயிகளின் உற்ற நண்பனாகத் திகழ் கின்றன. இவை காய்கறி மற்றும் தாவரங் களையும், விவசாயப் பயிர்களையும் சேதப் படுத்தும் பூச்சிகளை உண்பதால், ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடிக்கணக்கான உணவுப் பொருள்கள் சேதமடையாமல் தடுக்கப்படுகின்றன. பெரிய பழுப்பு நிற வவ்வால்களை வரவேற்போம்!