PUBLISHED ON : அக் 04, 2013

சிறிய சுறாமீன் வகையைச் சேர்ந்தது பாட்டில் மூக்கு டால்பின். இதற்கு பறவை அலகு போன்ற சிறிய மூக்கு உள்ளது. அது சிறியதாக இருப்பதால் எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருப்பது போலத் தோன்றும்.டால்பின் நன்றாக நீச்சல் அடிக்கும். உயரே தாண்டிக் குதிக்கும். நல்ல புத்திசாலி. நீருக்கு அடியில் பாதுகாக்கவும், மற்ற ரகசியப் பணிகளுக்கும் இவற்றை அமெரிக்கக் கடற்படை பழக்குகிறது.
டால்பின்கள் சந்திக்கும்போது, பெரும் விசில் சத்தம் கேட்கும். மீன் கூட்டத்தைப் பார்க்கும்போது அவை இவ்வாறு சத்தம் எழுப்பும். இதன்மூலம் மற்ற டால்பின் களும் அங்கு வரும். ஒரு டால்பின் தனது உடல் எடையைப் போல 10ல் ஒரு பங்கு மீனை தினமும் உணவாகக் கொள்ளும்.
டால்பின் மீன்கள் இரக்க குணம் கொண்டவை. தங்கள் கூட்டாளிக்கு காயம் ஏற்பட்டால் உடனே அங்கு விரையும். மயக்கமடைந்த டால்பினை மற்ற மீன்கள் தண்ணீருக்கு மேல் தூக்கி சுவாசத்துக்கு வழி செய்வதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். மற்ற டால்பின்கள் அதனைப் பாதுகாக்க விரைவதையும் உணர்ந்துள்ளனர். டால்பின் மீன்கள் ஒரு கண்ணைத் திறந்து கொண்டு தூங்கும். சிறிது நேரத்திற்கு பின் இன்னொரு கண்ணை மூடித்தூங்கும். இரண்டு கண்களையும் மூடியபடியே எப்போதும் தூங்காது!