
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்ட்ரூ ஜான்ஸன் அமெரிக்க நாட்டுக்கு ஜனாதிபதியானதும் தன்னுடைய நண்பரை அழைத்து அன்புடன் ஒரு பரிசைத் தந்தார். நண்பர் பரிசைப் பிரித்துப் பார்த்தார்.
''எனக்கு எதற்கு உயர்ந்த கோட்டு வாங்கினாய்? மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. சாதாரண கோட்டு வாங்கி இருக்கக் கூடாதா?'' என்று கேட்டார்.
''வாங்கவில்லை. நானே தைத்தது. முன்பு ஆரம்பத்தில் நான் இருந்த நிலையை மற்றவர்களுக்கு நினைவு படுத்த வேண்டும்.
''இந்த ஜனாதிபதியும் முதலில் ஒரு தையற்காரனாக இருந்தான் என்பதனை நான் மறந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இதை தைத்துக் கொடுத்தேன்,'' என்றார் ஆண்ட்ரூ ஜான்ஸன்.